சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

நானோ குழியில் சீரற்ற பிளாஸ்மாணிக் புல விநியோகம் கண்டறியப்பட்டுள்ளது

Posted On: 24 AUG 2020 7:37PM by PIB Chennai

இணையும் நானோ கட்டமைப்புகளால் உருவாகும் மின் காந்தப் புலன்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வதை சார்ந்ததாகவே பிளாஸ்மாணை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் உள்ளது. முன்னேறிய நிலையிலான நிறமாலை இயல்; காட்சி இயந்திரவியல்; காட்சி காந்தவியல்; உயிரி உணர்விகள் உட்பட பலவற்றில் பிளாஸ்மாண் அடிப்படையிலான பல அம்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்மாணை அடிப்படையாகக் கொண்ட அனைத்து தொழில்நுட்பங்களுக்கும், கருவிகளுக்கும், முறைகளுக்கும் புல விநியோகத் தன்மையின் ஆழம் ஒரு முக்கியமான அம்சமாகும். தற்போதைய ப்ளாஸ்மாண் அடிப்படையிலானரு வரைவு மற்றும் மூலக்கூறு உணரும் தொழில்நுட்பங்கள் குறுக்குவெட்டுத் தளத்திலான (எக்ஸ் ஒய்)  சீரற்ற புலத்தில் செயல்படுகின்றன. ஆனால் நீள்வாக்கு திசையில் விநியோகம் குறித்துப் பரிசோதனை முறையில் அளவீடுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. குறிப்பாக நானோ இடைவெளிக்குள் பிளாஸ்மாண் புல விநியோக ஆழம் குறித்துத் துல்லியமான அளவீடுகள் சவாலாகவே உள்ளன.

 

இந்தத் தடைகளைத் தாண்டி, ஒரு நானோ குழியில் சீரற்ற தன்மையை அளவிடுவதற்காக சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு 1 இது குறித்துப் பணியாற்றியது. இக்குழுவின் கண்டுபிடிப்புகள் இயற்கை நானோ தொழில்நுட்ப இதழின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்வதேச ஆய்வுக் குழுவில் தமிழ்நாட்டின் காரைக்குடியில் உள்ள மத்திய மின் ரசாயன ஆய்வு கழகம் சி எஸ் ஐ ஆர்- சி இ சி ஆர் ஐ அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் எம் கதிரேசன் இடம்பெற்றிருந்தார்.

 

 

Dr. M. Kathiresan

 

 

தாமாகவே இணைத்துக் கொள்ளக் கூடிய ஓரடுக்கு (எஸ் ஏ எம்) அடிப்படையிலான மூலக்கூறு வரைகோல் ஒன்று வயலஜன் செட்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது இந்த வரைகோலின் உதவியுடன் நானோ குழியில் நீளவாக்கில் பிளாஸ்மாண் புல விநியோகம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டது -2 -ஏ இட தெளி திறன் துல்லியத்துடன் கணக்கிடப்பட்டது. மூலக்கூறு வரைகோல் அடிப்படையிலான ஓர் அடுக்கு கொண்ட அனுக்கூறு அடிப்படையில் தட்டையான தனிப் படிக அமைப்பைக் கொண்டது. எஸ் ஏ எம் உயரத்தின் அடிப்படையில் நானோ குழியின் அளவு கணக்கிடப்பட்டது. வயலஜன்களிலிருந்து கிடைக்கும் ராமன் பிரிகை நிறமாலை மூலம் நானோ குழியின் பல்வேறு நீளவாக்கில் உள்ள இடங்களில் அளவுகள் வலிமைகள் கணக்கிடப்பட்டன. கண்டறியும் மூலக்கூறின் இடத்திற்கும் விநியோக நீள்வாக்கு இடங்களுக்கும் இடையேயான வேறுபாட்டின் காரணமாக நீள்வாக்கு இட தெளி திறன் அளவைக் கணக்கிடுவது, வரையறைக்குட்பட்டதாக இருந்தது. ப்ரோப் மோய்டியும் (மூலக்கூறும்,  வெவ்வேறு விதமான கொலாஜன் மூலக்கூறுகளுக்கும் இடையேயான இட தெளி திறன் -2 வாக இருந்தது. பெரிய எதிர்பாராத க்ரேடியன்டில்,  மின்புல வலிமை சீரற்றதாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளோம். நானோ குழியில் பிளாஸ்டிக் வரிசையில் அமைப்பதற்காக தனிப்பட்ட மூலக்கூறுகள் மூலக்கூறின் ஓர் அடுக்கிலிருந்து செயல்படுவதால் இவ்வாறு நேர்கிறது.

 

நானோ குழிகளில் பிளாஸ்மாணிக் விநியோகம் குறித்து அடிப்படையாகப் புரிந்து கொள்வதை அதிகரிப்பதோடு, பல்வேறு அம்சங்களுக்கு இந்தக் கருத்தியலைப் பொருத்த முடியும். பிளாஸ்மாண் அதிகமான எதிர்வினை போட்டோ தெரிந்தெடுக்கும் பிணைப்பு விடுவிப்பு,  மிக உயரிய தெளிதிறன்இராமன் ரசாயன ரு வரைவு, நானோ கருவிகளுக்கும், நானோ கட்டமைப்புகளை காட்சி ஆற்றல் கட்டுப்பாட்டின் மூலம் பொருத்துவது உட்பட பல நுட்பங்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவியாக இருக்கும்.



(Release ID: 1648285) Visitor Counter : 105


Read this release in: English