சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்த, விருப்பமுள்ள நிறுவனங்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு
Posted On:
21 AUG 2020 5:46PM by PIB Chennai
மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் கிராமப்புற ஏழை எளிய கைவினைஞர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக, பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதனீர், பனை கருப்பட்டி, பனை ஓலையிலிருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பிரஷ் வகைகளைத் தயாரிக்கவும், சந்தைப் படுத்தவும், கதர் கிராம தொழில்கள் ஆணையமானது நிதி உதவியுடன் கூடிய புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்திக் கொண்டுள்ளது.
மற்றும் பாரம்பரிய தொழில்களைப் புனரமைப்பதற்காகவும் அதன் மூலம் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நிரந்தர வருமானம் ஈட்டும் வகையில், கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் SFURTI (Scheme of Fund for Regeneration of Traditional Industries) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எனவே, பனை சம்பந்தப்பட்ட தொழில்களில் அனுபவம் வாய்ந்த மற்றும் விருப்பமுள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களை http://kviconline.gov.in/sfruti என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இந்த ஆணையத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
(Release ID: 1647646)
Visitor Counter : 115