அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

காசநோய் மற்றும் சிக்குன்குனியாவைத் தடுக்கும் முதல் செயற்கை வழி ஃபிளாவனாய்டு மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு

Posted On: 20 AUG 2020 3:05PM by PIB Chennai

காசநோய் மற்றும் சிக்குன்குனியாவைத் தடுக்கும் ருகோசாஃப்ளவனாய்டுகள், போடோகார்ஃப்ளேவோன் மற்றும் ஐசோஃப்ளேவோன் போன்ற ஃபிளாவனாய்டு மூலக்கூறுகள் தாவரங்களிலிருந்து இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக, விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் உள்ள மூலக்கூறுகளை ஒருங்கிணைப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து, அவற்றைக் கொண்டிருக்கும் மருத்துவத் தாவரங்களை மிகைப்படுத்தாமல் அனைத்துப் பருவங்களிலும் அவற்றில் இருந்து கிடைக்கும் தன்மையை உறுதி செய்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையைச் (டிஎஸ்டி) சார்ந்த தன்னாட்சி நிறுவனமான புனே அகர்கர் ஆராய்ச்சி நிறுவன (ஏ.ஆர்.ஐ) விஞ்ஞானிகள், காசநோய் மற்றும் சிக்குன்குனியாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஃபிளாவனாய்டு  மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதற்கு முதல் செயற்கை வழியைக் கண்டுப்பிடித்துள்ளனர். கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சாத்தியமான பதில்கள் குறித்த ஆரம்ப அறிகுறிகள் அப்போது தென்பட்டன.

 

சகமதிப்பாய்வு செய்யப்பட்ட ‘ஏ.சி.எஸ் ஒமேகா’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட டாக்டர்.பிரதிபா ஸ்ரீவாஸ்தவா மற்றும் அவரது ஏ.ஆர்.ஐ குழுவினரின் அன்மைக்காலப் படைப்புகளின் படி   ஃபிளாவனாய்டு தொகுப்புகளான ‘ருகோசாஃப்ளவனாய்டுகள், போடோகார்ஃப்ளேவோன் மற்றும் ஐசோஃப்ளேவோன்’ போன்ற ஃபிளாவனாய்டுகளின் முதல் தொகுப்பை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன மருத்துவத் தாவரமான ருகோசாஃப்ளவனாய்டு ஏ' ரோசா ருகோசாவிலிருந்து அறியப்படுகிறது. 'போடோகார்ப்ளவோன்’,' போடோகார்பஸ் மேக்ரோப்பைலஸ் தாவரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது .



(Release ID: 1647578) Visitor Counter : 83