சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்

Posted On: 15 AUG 2020 3:04PM by PIB Chennai

இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா, வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகத்தில்; 15.08.2020 இன்று துறைமுக நிர்வாக அலுவலகத்தில் காலை 9.00 மணியளவில் கொண்டாடப்பட்டது.

     திரு தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தலைவர் அவர்கள், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அவர் தனது சுதந்திரதின உரையில், நம்முடைய முன்னோர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்து சுதந்திரம் பெற்று தந்ததை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த நிதியாண்டில் ஜீலை வரை 10.57 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர்கள், துறைமுக அதிகாரிகள், ஊழியர்கள், தொழிற்சங்க தலைவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.

 மேலும் தனது உரையில் மத்திய கப்பல்துறை அமைச்சகம் நம் நாட்டில்; சுய சார்ந்த பாரதம்’ (ஆத்ம நிர்பார் பாரத்) திட்டத்தினை செயல்படுத்துவதற்காக துறைமுகம் சார்ந்த தொழில் துவங்குவதற்கும் சுயசார்ந்த துறைமுக உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று கூறினார். அதன்படி நமது துறைமுகம் 1689 ஏக்கர் நிலப்பரப்பினை துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைவதற்காக ஒதுக்கியுள்ளது. துறைமுக நிலத்தில் உரத் தொழிற்சாலை, பொட்ரோலிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, சமையல் எண்ணெய் தொழிற்சாலை, எரிவாயு தொழிற்சாலை மற்றும்  காற்றாலை உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற தொழில் துவங்குவதற்கு பல்வேறு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக மாற்றுவதற்கு ரூபாய் 7000 கோடி திட்டமதிப்பில் நான்கு பகுதிகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இவ்விழாவில் கொரோனா தொற்றின் போது துறைமுகத்தில் சிறப்பாக பணியாற்றிய துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

திரு தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் அவர்கள் துறைமுக துறை தலைவர்கள் முன்னிலையில் கொரோனா கையேட்டை வெளியிட்டார். அதன் முதல் பதிப்பை திரு.பிமல்குமார் ஜா, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத் துணை தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இவ்விழாவில் பங்கேற்ற அனைவரும் முககவகம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் போன்ற அனைத்து பிரத்தியோக நிலையான செயல்பாடுகளை கடைபிடித்தனர். 

     மேற்சொன்ன தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது



(Release ID: 1646074) Visitor Counter : 162


Read this release in: English