புவி அறிவியல் அமைச்சகம்

ஆகஸ்ட் 12 முதல் 15 வரை, வடமேற்கு இந்தியா மற்றும் நாட்டின் மத்தியப் பகுதிகளில் தீவிர மழைப் பொழிவு

Posted On: 11 AUG 2020 8:55PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின், தேசிய வானிலை கணிப்பு மையம் / பிராந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதாவது:

  • வடமேற்கு வங்கக் கடலுக்கு மேலே, இம்மாதம் 13-ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கக் கூடும், இது மேற்குக் கடற்கரையின் வடபகுதிகளிலும், வடக்கு வங்காள விரிகுடாவுக்கு மேலேயும் பருவ மழைப் பொழிவை, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆகஸ்ட் 12-15 வரையிலான காலகட்டத்தில், மேற்கு இமாலயப் பிராந்தியம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமேற்கு இந்தியப் பகுதிகளில், கனமானது முதல் மிகக் கனமான மழை பெய்யும்.
  • குஜராத் மாநிலம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும்.

-----



(Release ID: 1645277) Visitor Counter : 113


Read this release in: English , Hindi