சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

प्रविष्टि तिथि: 11 AUG 2020 4:11PM by PIB Chennai

அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு     வந்தடைந்த, தஞ்சாவூரைச் சேர்ந்த சாமிநாதன் கண்ணன், தங்கவேல் சிவசங்கர், ஆகிய இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர்களிடமிருந்து தங்கப் பசை அடங்கிய பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.

     அபுதாபியிலிருந்து மற்றொரு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்த பயணியான கமாரூதீன் ஷாஜஹானிடமிருந்தும் தங்கப் பசை அடங்கிய பொட்டலம், சுங்கத்துறையினரின் சோதனையின்போது கைப்பற்றப்பட்டது.

     மொத்தம் ரூ.22.21 லட்சம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

-----

 


(रिलीज़ आईडी: 1645047) आगंतुक पटल : 84