சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பட்டியலின, பழங்குடியின இளையோருக்கு சுருக்கெழுத்துப் பயிற்சி

Posted On: 11 AUG 2020 10:24AM by PIB Chennai

பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு, 27-வது கட்ட  சிறப்புப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சுருக்கெழுத்துப் பயிற்சியை சென்னையில் உள்ள, பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது. தகுதி உள்ள நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின்  மூலம் 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

 

  இந்தப் பயிற்சியை அளிக்க விரும்பும் நிறுவனங்களையும் தேசிய தொழில்பயிற்சி மையம் தேர்ந்தெடுக்க உள்ளது. பயிற்சி அளிக்க போதுமான வசதிகள், உள்கட்டமைப்பு, இடவசதி உள்ள நிறுவனங்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.  

 

     தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள், பொது அறிவு, பொது ஆங்கிலம், கணிதத்திறன், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு, அடிப்படை கணினி அறிவு ஆகியவற்றில் பயிற்சி அளித்து, தமிழகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளில், பட்டியலினம் மற்றும் பழங்குடியின இளையோரைத் தகுதி பெறச் செய்யும் திறன் படைத்தவைகளாக இருக்க வேண்டும். பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு, பயிற்சி பெறும் ஒரு நபருக்கு ரூ.800 வீதம் கட்டணத்தொகையை தேசிய தொழிற்பயிற்சி மையம் வழங்கும்.

 

     பயிற்சி அளிக்க விரும்பும் நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களை 2020 ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள், துணை பிராந்திய  வேலைவாய்ப்பு அலுவலர், எண்.56, மூன்றாது தளம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் கட்டடம், சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை -600 004 (தொலைபேசி எண் – 80720 95783)  என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

 

     சென்னை பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் பிராந்திய வேலைவாய்ப்பு துணை அலுவலர் திரு எஸ் கே சாஹூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

-----

 



(Release ID: 1644997) Visitor Counter : 119