சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தேசிய கல்விக்கொள்கை 2020: இந்தியாவை உலகின் உச்ச சக்தியாக மாற்றுவதற்கான, மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட திட்ட வரைவு


திருச்சிராப்பள்ளி கள விளம்பரம் மற்றும் தொடர்புப் பிரிவு ஏற்பாடு செய்த தேசிய கல்விக்கொள்கை 2020 பற்றிய இணையவழிக் கருத்தரங்கம்

Posted On: 10 AUG 2020 6:28PM by PIB Chennai

தேசிய கல்விக்கொள்கை 2020, நன்கு ஆலோசனை செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஆவணம். நம் நாட்டை உலக அளவில் மாற்றக்கூடிய வரைபடம் என்று தேசிய கல்விக்கொள்கை 2020 பற்றி திருச்சிராப்பள்ளி கள விளம்பரம் மற்றும் தொடர்புப் பிரிவு நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பேசிய பேச்சாளர்கள் கூறினார்கள். தமிழ்நாடு புதுச்சேரி மண்டல கள விளம்பரம் மற்றும் தொடர்புப் பிரிவு இணை இயக்குர் திரு.காமராஜ் தலைமை உரையாற்றுகையில் வெற்றிகரமான ஒரு நாட்டிற்கு வலுவான கல்விக்கொள்கை அடித்தளமாக அமைய வேண்டும் என்று கூறினார். இந்தியாவை உலக அளவில் உச்ச சக்தியாக மாற்றுவதற்கான மிகப்பெரிய அடியெடுத்து வைப்பதாக இந்த புதிய கல்விக்கொள்கை உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதுமை, ஆராய்ச்சி ஆகியவற்றில் உறுதியான நிலைப்பாட்டை புதிய தேசிய கல்விக்கொள்கை உருவாக்கும் என்றும், இதன் மூலம் அறிவுத்துறையில் இந்தியா தன்னிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய அளவிலான சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு, 20 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள நலந்தா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின், ஆச்சாரிய வீ சி மலர்மன்னன், கல்விப் பொழுதுபோக்காகவே இருக்கவேண்டும் என்றும், கல்விக்கொள்கை மிகவும் நுட்பமானது என்பதால், அது குறித்துப் பரவலாவிவாதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கை விதைக்கப்பட வேண்டும் என்றும், கல்வியின் மூலமாக நல்லொழுக்கமும், கலாச்சாரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். கல்வி அமைப்பு தரம் வாய்ந்ததாகவும், போட்டியிடும் திறன் கொண்டதாகவும் அமைக்கப்படவேண்டும். அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை தேசிய கல்விக்கொள்கை உறுதிசெய்கிறது என்றும், தரமான கல்வி குறைந்த செலவிலேயே கிடைப்பதையும் உறுதி செய்கிறது என்றும் கூறினார். கல்வி என்பது முழுமையானதாக இருக்கவேண்டும் என்றும், இது போன்ற விவாதங்கள் மேலும் அதிக அளவில் நடைபெற வேண்டுமென்றும் தேசிய கல்விக் கொள்கையை கண்மூடித்தனமாக எதிர்க்கக்கூடாது என்றும் அவர் கூறினார். திருச்சிராப்பள்ளியில் உள்ள காவேரி மகளிர் கல்லூரியின் துணைப்பேராசிரியர் டாக்டர். எஸ்.தாமரைச்செல்வி பேசுகையில் உயர்ந்த தரம் வாய்ந்த கல்வியை அளித்து, சமத்துவ, ஆற்றல் வாய்ந்த சமுதாயத்தை உருவாக்குவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது என்று கூறினார். அடிப்படை அம்சங்களுக்கு மிகுந்த மரியாதை உணர்வு பெருகச் செய்வதாக இந்தக் கொள்கை உள்ளது. பள்ளிப்பருவத்தில் இருந்தே ஒருவரது தொழில் திறனை மேம்படுத்த உதவுகிறது. சமுதாயப் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி பெறமுடியும் என்பதை, தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது என்றும் குறிப்பிட்டார். ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் என்ற எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் கல்வி என்பதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார். பாடத்திட்டத்தைக் குறைப்பது என்பது மாணவர்களுக்கு ஒரு வரமாக அமையும் என்று கூறினார். வகுப்புகள் அதிக அளவில் கலந்துரையாடல்கள் கொண்டனவாகவும் பரிசோதனை அடிப்படையிலான கல்வியாகவும் இருக்கவேண்டும் என்றும்,  பாரம்பரியக் கல்வி முறையையும், ஆன்லைன் வகுப்புகளையும் இணைத்த ஒரு கல்வி முறையையும் பின்பற்ற வேண்டும் என்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் உடல் நலத்திலும்,, மன நலத்திலும் அக்கறை செலுத்துகிறது என்று குறிப்பிட்ட அவர், அனைத்து மாணவர்களுக்கும், ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்வது இந்தப் புதிய கொள்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளிகளுக்கு புத்தகப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டாத நாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் கவனம் செலுத்தும் வகையிலான கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். புதிய கல்விக்கொள்கையில் கணிதத்திற்கும், கணக்கியல் சிந்தனை முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒன்பதாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும். வாரியத் தேர்வுகள் எளிமையாக்கப்படும். சுயமதிப்பீடு, சம வகுப்பினரின் மதிப்பீடு, ஆசிரியரின் மதிப்பீடு போன்ற அனைத்து மதிப்பீடுகளையும் கொண்டதாக முழுமையான மதிப்பீட்டுடன் கூடிய மாணவர்களின் முன்னேற்றம் குறித்த பிராக்ரஸ் அட்டைகள் வழங்கப்படலாம் என இந்த கல்விக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளூர் மொழி, தாய்மொழி, வீட்டு பயன்பாட்டு மொழி உட்பட அந்தந்த மாநிலங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பள்ளிகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். பள்ளிக்குச் செல்வதை பாதியில் நிறுத்தும் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி கள பிரச்சார அலுவலர் திரு. கே. தேவி பத்மநாபன் அறிமுக உரையாற்றுகையில் பள்ளிக்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வது புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று கூறினார். இருபத்தோராம் நூற்றாண்டு இளைஞர்களின் லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, புதிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். கல்வி அமைப்பு உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு உயர்த்தப்படும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வருவது தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று அவர் கூறினார். பள்ளிகளில் கல்வி பயின்று பாதியில் படிப்பை நிறுத்திவிட்ட சுமார் 2 கோடி மாணவர்களை மீண்டும் கல்வி பெறச் செய்வதும் புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று அவர் கூறினார் 2030ஆம் ஆண்டுக்குள் பள்ளிகளில் 100 சதவிகித மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதும், தேசிய கல்விக்கொள்கையின் நோக்கமாகும். தற்போதைய 5+3+3+4 கல்வி முறை 3-8, 8-11, 11-14, and 14-18 வயது வாரியாக மாற்றி கட்டமைக்கப்படும்.  3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை, மழலையரை பள்ளிக்குக் கொண்டு வர முடியும். நேரு யுவகேந்திரா மையத்தில் இளைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஸ்ருதி எஸ் பேசுகையில் ஏறத்தாழ 34 ஆண்டுகளுக்குப் பிறகு, கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் வரவேற்கத் தகுந்த நடவடிக்கை என்றும் கூறினார். திருச்சிராப்பள்ளி கள விளம்பரம் மற்றும் தொடர்புப் பிரிவு பிரச்சார உதவியாளர் திரு.ரவீந்திரன் வரவேற்புரையாற்றினார். இணைய வழிக் கருத்தரங்கைத் தொகுத்து வழங்கினார். திருச்சிராப்பள்ளி நேரு யுவ கேந்திராவின் திரு.ஆர்.மகேஸ்வரன் நன்றி தெரிவித்தார். கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு மின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தக் கருத்தரங்கு முழுமையும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது யூ டியூப் இணைப்பு தமிழ்நாடு புதுச்சேரி https://youtu.be/6wRIHO4eAnY and https://youtu.be/zMpxOqYIqPQ  இக்கருத்தரங்கைக் காணலாம்.

கருத்தரங்கிலிருந்து சில காட்சிகள்

 



(Release ID: 1644873) Visitor Counter : 148