சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில், இந்திய அஞ்சல் சிறு சேமிப்புகள், கிராமப்புற வீடுகளுக்கு ஒரு வரம்

தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் மேலான அஞ்சல் அலுவலகத்தில் சிறு சேமிப்பு கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன

Posted On: 28 JUL 2020 4:38PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றுநோய் இரண்டாம் கட்டத் தளர்வில், துன்பப்படும் ஏழைகளின் மறுவாழ்வுக்கும், அவர்கள் மீண்டெழுவதற்குமான ஒரு முக்கிய காலகட்டம். சிறுசேமிப்பு. குறிப்பாக அஞ்சல் சேமிப்பு என்பது கடினமான காலங்களில் குறைந்த வருமானத்தை சேமிக்கும் மக்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களில் ஏழை மக்களிடையே தபால் அலுவலக சேமிப்பு மிகவும் பிரபலமானது. தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி தபால் அலுவலகத்தில் சிறுசேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உள்ளனர். இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கி (India post payment bank) வங்கிச் சேவைகளுடன் வீட்டின் வாயிலுக்கே வந்து வங்கி வசதிகளை வழங்குகிறது. தபால் நிலையங்கள் மற்றும் தபால் ஊழியர்களின் பரந்த வலைப்பின்னல் அமைப்பு நாட்டின் தொலைதூர மூலைகளுக்கும் பரிவர்தனைகளை எளிதாக செயல்படுத்துகிறது. இந்தி அஞ்சலின் வீட்டு வாசலுக்கே வரும் (India post door step banking) வங்கிச் சேவைகளில் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பிப்பது நிதிப் பரிமாற்றம் செய்தல், பணத்தை டெபாசிட் செய்தல் மற்றும் பணத்தை திரும்பப் பெறுதல், ரீசார்ஜ் செய்தல் அல்லது கட்டணம் செலுத்துதல் மற்றும் பலவற்றைச் செய்வது எளிது.

தபால் அலுவலக சேமிப்பு வங்கியில் ஒரு கணக்கு தொடங்குவதை வயது வந்தவர்கள் மட்டுமல்லாது, 10 வயதுக்கு மேற்பட்டவர் கூட கூட்டுக் கணக்கைத் தொடங்க முடியும் என்று தபால் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர். குறைந்தபட்ச தொகை ரூ.500 பணத்துடன் மட்டுமே கணக்கு ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு 4 சதம் வட்டி வழங்கப்படுகிறது. தபால் அலுவலக சேமிப்பு கணக்குகளுக்கு காசோலை வசதி, ஏடிஎம் வசதி உள்ளது. மேலும் வழங்கப்படும் வட்டிக்கு ஒரு ஆண்டுக்கு ரூ .10,000 வரை வரி விலக்கு. சேமிப்புக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாம். வங்கிகளைப் போலவே, இணையம் மூலம் இயக்ககூடிய வசதி (intra operable netbanking), மொபைல் பேங்கிங் வசதியும் அஞ்சல் சேமிப்புக் கணக்குகளில் கிடைக்கின்றன. தபால் அலுவலக சேமிப்புக் கணக்குகளுக்கிடையே, காசோலைகள் நிறுத்த சோதனை, பரிவர்த்தனைப் பார்வை வசதி ஆகியவற்றுக்கு இடையே இணைய வழி நிதிப் பரிமாற்றம், இணையம் மூலம் இயக்கக்கூடிய வசதி (intra operable netbanking),மற்றும் கைபேசிச் செயலி வழி பரிவர்த்தனை வசதிகளும் கிடைக்கிறது.

இந்திய அஞ்சல் பணம் செலுத்தும் வங்கி (IPPB) கைபேசிச் செயலியின் மூலம் கணக்கை அணுகவும் மொபைல் போனின் வசதியிலிருந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் எளிய, பாதுகாப்பான மொபைல் வங்கிச் சேவையை வழங்குகிறது. வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு பயணம் செய்யாமல் பல பரிவர்த்தனைகள். செய்ய முடிந்ததால், கோவிட்- 19 ஊரடங்கு நேரத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மொபைல் வங்கிச் சேவைகளைச் செயல்படுத்த, IPPB செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டு செயலியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மொபைல் வங்கிச் சேவை, கணக்கு இருப்பு விசாரணை, ஒருவரின் கணக்கின் அறிக்கைக்கான கோரிக்கை, ஒரு காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை (நடப்புக் கணக்கு), ஒரு காசோலையில் பணம் செலுத்துவதை நிறுத்துவது, வங்கிக்குள் நிதியை மாற்றுதல், பிற வங்கிக் கணக்குகளுக்கு நிதிப் பரிமாற்றம், நீர், மின்சாரம் மற்றும் பயன்பாட்டு பில்கள் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் மற்றும் பல சேவைகளை இதன் மூலம் பெறலாம்.

திருச்சிராப்பள்ளியில் உள்ள பல்லக்காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ் மீனா, தபால் அலுவலகத்தில் சிறு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பதாகக் கூறினார். மேலும் இது சேமிப்பு பழக்கத்தை உருவாக்கியதால், எனவே கஷ்ட காலங்களில் தனக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார். திருச்சிராப்பள்ளியின் சோமராசம்பேட்டையைச் சேர்ந்த சித்ராதேவி கூறுகையில், அண்மை உத்தரவு காரணமாக கிராமப்புறங்களில் கூட தபால் அலுவலக சேமிப்பு எளிதாக அணுக முடியும். அத்துடன் வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக நகரத்திற்கு இனி பயணிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் அஞ்சல் அலுவலக சேமிப்பு கிராமப்புற மக்களுக்கு பெரும் ஆதரவாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தபால் நிலையங்கள் பல ஆண்டுகளாக தங்கள் நடவடிக்கைகளை பன்முகப்படுத்தியுள்ளன, கிராமப்புறக் கிளைகளில் சமீபத்திய சேமிப்புக் கணக்குகள் கிராமப்புற மக்களை தங்கள் நிதிகளை சுயாதீனமாக நிர்வகிக்க ஒரு பெரிய நிதி சேர்க்கும் முயற்சியாக இருக்கும். குறிப்பாக இது மகளிருக்கு அதிகாரமளித்தலில் ஒரு பெரிய முயற்சியாகவும் திகழ்கிறது, அவர்கள் தபால் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்குகளை ஆவலுடன் திறந்து வருவதுடன்,  ஒவ்வொரு நாளும் அவர்களின் நிதி கல்வியறிவு சார்ந்த விழிப்புணர்வையும் அதிகரித்து வருகின்றனர்.

IPPB மொபைல் செயலி

எஸ் மீனா, பல்லக்காடுதிருச்சி

ஐ. சித்ராதேவி சோமராஜம்பேட்டை, திருச்சி

 



(Release ID: 1641816) Visitor Counter : 159