சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னம்பிக்கை பிரத்யேக அடையாள அட்டை.


மாற்றுத் திறனாளிகளுக்கு கோவிட்-19 நிதியுதவியாக ரூ.1,000 பட்டுவாடா .

Posted On: 25 JUL 2020 5:00PM by PIB Chennai

ஊரடங்கு காலகட்டத்தில் அதிக உதவி தேவைப்படுவதால், மாற்றுத் திறனாளிகளுக்கு கோவிட்-19 பெருந்தொற்று, பல்வேறு புதுவித சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.   கோவிட்-19 தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர், வீட்டு வேலைக்காக தங்களது வீட்டிற்குள் வேலையாட்களை அனுமதிக்கத் தயங்கும் நிலையில்வேலைக்கு அமர்த்திய குடும்பத்தினரிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றனர்ஊரடங்கு காரணமாக, அன்றாடக் கூலி மற்றும் ஒப்பந்த வேலைகளைச் சார்ந்திருக்கும் மாற்றுத் திறனாளிகள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்துயரத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு, சுயசார்பு இந்தியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி மற்றும் பல்வேறு திட்டங்கள், அவர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளனஇது தவிர, அடையாள ஆவணம் மற்றும் உடல்திறன் குறைபாடு விவரங்களுடன் கூடிய, உலகளாவிய அடையாளம் மற்றும் சான்றிதழ் அடங்கிய தன்னம்பிக்கை (Swavlamban) பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறதுமையப்படுத்தப்பட்ட இணைய விண்ணப்பம் மூலம், நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றிய புள்ளி விவரங்கள் அடங்கியதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறதுஉடல்திறன் குறைபாடு சான்றிதழ் / உலகளாவிய அடையாள அட்டை வேண்டுவோர், இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளதுஎனினும்நேரடியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் அவை சம்பந்தப்பட்ட முகமைகளால் டிஜிட்டல்மயமாக்கப்படும்.   மாற்றுத்திறனாளிகள் சார்பில், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தகவல் பதிவும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.   எனவே, மாற்றுத் திறனாளிகள் அனைவரும், தங்களைப் பற்றிய விவரங்களை, உலகளாவிய அடையாள அட்டைத் தளத்தில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறதுஒருமுறை ஆன்லைன் முறையில் பதிவு செய்துவிட்டால்உடல்திறன் குறைபாடு சான்றிதழ்/உலகளாவிய அடையாள அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.   அத்துடன், அவர்கள் தங்களது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம்உடல்திறன் குறைபாடு சான்றிதழ் / உலகளாவிய அடையாள அட்டை புதுப்பித்தல் விண்ணப்பம் மற்றும்  தொலைந்துபோன அடையாள அட்டைக்குப் பதிலாக மாற்று அடையாள அட்டை கோரியும் இணையம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்மேலும், தங்களுக்கான உடல்திறன் குறைபாடு சான்றிதழ் / உலகளாவிய அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்து, அதனை நகல் எடுக்கலாம். நாடு முழுவதும் இதுவரை சுமார் 50 லட்சம் உலகளாவிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனதமிழ்நாட்டில் மட்டும் 2.24 லட்சம் உலகளாவிய அடையாள அட்டைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன

உலகளாவிய அடையாள அட்டையில், தேவையான அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாற்றுத் திறனாளிகள், தங்களைப் பற்றிய ஆவனங்களை நகல் எடுக்கவோ, அவற்றைப் பாதுகாக்கவோ அல்லது, ஏராளமான ஆவணங்களை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமோ இல்லை என, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.   உலகளாவிய அடையாள அட்டையை, மாற்றுத் திறனாளிகள் எதிர்காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு சரிபார்க்கவும், அடையாள ஆவனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்இது தவிர, பயனாளியின் உடல்திறன் மற்றும் நிதிநிலை முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்கும் உதவக் கூடியதாகும்.    உடல்திறன் குறைபாடு சான்றிதழ் வழங்கத் தகுதி பெற்ற அதிகாரிகளும் (தலைமை மருத்துவ அதிகாரி அலுவலகம்/ மருத்துவ ஆணையம்), இந்த விண்ணப்பத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொண்டு, உடல்திறன் குறைபாடு சான்றிதழ்/உலகளாவிய அடையாள அட்டைகளை மின்னணு முறையில் வழங்கலாம்உடல்திறன் குறைபாட்டை மதிப்பிடுவதற்காக, சிறப்பு மருத்துவர் / மருத்துவக் குழு முன் ஆஜராக பரிந்துரைக்கப்படும் மாற்றுத் திறனாளிகள், தங்களைப் பற்றிய மதிப்பீடு முடிவடைந்தவுடன், அந்த மதிப்பீடு பற்றிய விவரங்களைச் சமர்ப்பித்ததும், மின்னணு வடிவிலான உடல்திறன் குறைபாடு சான்றிதழ் / உலகளாவிய அடையாள அட்டை வழங்கப்படும்

 

தமிழ்நாட்டில் மட்டும், உலகளாவிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளைப் பெற்றுள்ள 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு, கோவிட்-19 நிதியுதவியாக தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறதுதிருச்சிராப்பள்ளியில், அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள்கோவிட்-19 நிதியுதவி ரூ.1,000- பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்இந்த நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கு, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம், அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது.   எனவே, நிதியுதவி பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள், அனைத்திற்குமான அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் சென்று, அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்ஊரடங்கு காலத்தில் நிதியுதவி அளிப்பதற்காக, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பயனாளி சீனிவாசன் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்தங்களது வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிதியுதவியை அதிகரித்து வழங்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளார்

இரண்டாம் கட்ட ஊரடங்குத் தளர்வுக் காலத்தில்பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்தற்போதைய சிக்கல்களிலிருந்து மீண்டுவர, சிறப்பு ஆதரவு தேவைப்படுவதால், மாற்றுத் திறனாளிகளை கருணையுடன் நடத்த வேண்டும்.                                                                    *****

 

 

 

****



(Release ID: 1641198) Visitor Counter : 228