சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஆஜீவிகா ஊரக வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம்: தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5274 கோடி வழங்கப்படவுள்ளது.


ஊரக மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் வேலையற்றத் தொழிலாளர்களுக்கு ரூ. 1 கோடி கடன் வழங்கப்படும்.

Posted On: 21 JUL 2020 5:06PM by PIB Chennai

கொரோனா பெருந்தொற்றினைத் தொடர்ந்த ஊரடங்கு விலக்கின் இரண்டாவது கட்டம் என்பது வேலையை இழந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள தொழிலாளர்களுக்கு புதிய வழிகளை உருவாக்குவதற்கான காலமும் ஆகும். இத்தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப் பொருள்களை இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆஜீவிகா என்ற பெயரில் மத்திய ஊரக வளர்ச்சிக்கான அமைச்சகம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் கிராமப்புற ஏழைகளுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். இதற்கான முதலீட்டில் ஒரு பகுதி உலக வங்கியின் ஆதரவுடன் பெறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நீடித்த வாழ்வாதார மேம்பாடுகளின் மூலமும், நிதிசார் சேவைகளை அணுகுவதை மேம்படுத்துவதன் மூலமும் அவர்கள் தங்களது குடும்ப வருமானத்தை அதிகரித்துக் கொள்ள இத்திட்டம் உதவுகிறது. சுயமாகவே தங்களை நிர்வகித்துக் கொள்ளும் சுய உதவிக் குழுக்களின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 6 லட்சம் கிராமங்களில் 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இந்த வசதியை வழங்குவதென கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் திட்டமிட்டிருந்தது. 2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 1,49,160 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 5,274.40 கோடி வழங்குவது என கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

மேலும் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கத்தின் அடிப்படையில் ஊரக மாற்றத்திற்கான  திட்டத்தை தமிழ்நாடு அமல்படுத்தி வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இதர மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தங்கள் வேலைகளை இழந்து வீட்டிற்குத் திரும்பியுள்ள தொழிலாளர்கள் சொந்தமாக வர்த்தகம் செய்வதற்கென ரூ.1 லட்சம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள தகவலின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மணப்பாறை, மணிகண்டான், முசிறி, அந்தநல்லூர், துறையூர் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 135 கிராமங்களைச் சேர்ந்த இவ்வாறு வேலையிழந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ள தொழிலாளர்கள் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு ஆண்களுக்கு 18 முதல் 35 வயது வரையும், பெண்களுக்கு 18 முதல் 40 வயது வரையும் ஆகும். இதற்கான பயனாளிகள் இந்தக் கடனைப் பெறுவதற்கு ஊரக வட்டங்களில் உள்ள வறுமை ஒழிப்புத் திட்ட அலுவலகங்களையோ அல்லது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகங்களையோ அணுக வேண்டும். மாநிலத்திற்கு உள்ளிருந்தோ, நாட்டிற்கு உள்ளிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ ஊருக்குத் திரும்பியுள்ள, ஒரு தொழில்முனைவராக உருவாக விரும்புகின்ற அல்லது புதிய தொழில் ஒன்றைத் தொடங்க விரும்புகின்ற தனித்திறன் பெற்ற இளம் புலம் பெயர்ந்தோரின் மீது இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. மாநில திட்ட மேலாண்மைப் பிரிவு மாவட்டத் திட்ட மேலாண்மைப் பிரிவுக்கு இதற்குரிய நிதியை வழங்கும். அதன் பிறகு பெறப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடானது (இதற்கென பெறப்படும் விண்ணப்பங்கள் உரிய மட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட பிறகு தேவைப்படும் மொத்த நிதிக்கான அளவு ஒருங்கமைக்கப்பட்டதன் அடிப்படையில்) தேவைக்கு ஏற்ப ஊரக வறுமைக் குறைப்புக்கான குழுவின் வங்கிக்கணக்கிற்கு இந்த நிதி மாற்றம் செய்யப்படும்.  இவ்வாறு நிதியைப் பெற்றவுடன் ஊரக வறுமைக் குறைப்புக்கான குழு தொழில்முனைவரின் தனிநபர் வங்கிக் கணக்கிற்கு நிதி செலுத்தப்படும்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட குடிமைப் பொருள்களையும் மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கான அமலாக்கப்பட்ட ஊரடங்கினால் இவ்வாறு வேலை இழந்த கரூரைச் சேர்ந்த  பாலச்சந்தர் ஊரடங்கு காலத்தில் இவ்வாறு இலவசமாக ரேஷன் பொருள்களை வழங்குவதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஊரக வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கத்தின் மூலம் உதவி செய்ய முன்வந்துள்ள அரசின் முயற்சியையும் அவர் பாராட்டினார். வேலை இழந்ததன் விளைவாக தாங்கள் நடத்திவரும் போராட்டத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு உதவி செய்வதற்கு இந்த ஊரடங்கு விலக்கின் இரண்டாம் கட்டம் மிகவும் பொருத்தமான நேரமாகும்.

இந்த ஊரடங்கின் விளைவாக தினக்கூலிகளும், தொழிலாளர்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் வகையிலும் லாபகரமான வேலைவாய்ப்பைப் பெறவும், பிரச்சினைகளை துணிவோடு எதிர்கொள்ளவும் மத்திய அரசு அவர்களுக்கு உதவி வருகிறது.

 

தொழிலாளர் சிறப்பு ரயில்களின் மூலம் மற்ற மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் திருச்சிராப்பள்ளிக்குத் திரும்புகின்றனர்.

ஆஜிவிகா

Aajeevika

தமிழ்நாடு ஊரகப் புதுவாழ்வுத்திட்டம்

 

தமிழ்நாடு ஊரகப் புதுவாழ்வுத்திட்டம்

பாலச்சந்தர் கரூர்.

 



(Release ID: 1640241) Visitor Counter : 355


Read this release in: English