சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

டைடன் நிறுவனத்திற்கு தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களுக்கான ஹால்மார்க் அனைத்திந்திய ஒன்றுபட்ட உரிமத்தை பிஐஎஸ் வழங்கியது

Posted On: 20 JUL 2020 2:35PM by PIB Chennai

சென்னை இந்திய தர நிர்ணய அலுவலகம் (பிஐஎஸ்), தங்க நகைகள், ஆபரணங்கள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் (IS 1417:2016)  மற்றும் வெள்ளி நகைகள், ஆபரணங்கள் மற்றும்  கலைப்பொருட்கள் (IS 1417:2016) ஆகியவற்றுக்கு    அனைத்திந்திய ஒன்றுபட்ட உரிமம்/சான்றிதழை (All India Corporate Certificate), ஓசூர் டைடன் கம்பெனி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 198 டைடன் கடைகள் அனைத்திற்கும் இந்த உரிமம் செல்லுபடியாகும்.

இந்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம்,  நகைகள், ஆபரணங்கள் மற்றும்  கலைப்பொருட்கள் தொடர்பான ஆணை ஒன்றை   ஜனவரி 15, 2020 அன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 2021 முதல் நகைகள், ஆபரணங்கள் மற்றும்  கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் செய்வது கட்டாயமாக்கப்படும்.  இது நேர்த்தியான மற்றும் தூய்மையான நகைகள், ஆபரணங்கள் மற்றும்  கலைப்பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்கும்,  இது தொடர்பான சட்டங்களை  உற்பத்தியாளர்கள் பின்பற்றுவதற்கும் உதவும் என்று சென்னை பிஐஎஸ் அலுவலகத்தின் துணை இயக்குனர் திரு.எச்.அஜய் கன்னா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

***********



(Release ID: 1639895) Visitor Counter : 117