சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஜல் ஜீவன் இயக்கம் 2024 ஆம் ஆண்டளவில் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய் இணைப்பை உறுதி செய்கிறது


<<< இந்த நிதியாண்டில் ஜல்ஜீவன் இயக்க திட்ட்த்தின் கீழ் 917 கோடி ரூபாயை தமிழகம் ஒதுக்கியது >>>

Posted On: 19 JUL 2020 4:51PM by PIB Chennai
  • கே தேவி பத்மநாபன் கள விளம்பர அதிகாரி திருச்சிராப்பள்ளி

-K DEVI PADMANABHAN FIELD PUBLICITY OFFICER TIRUCHIRAPALLI

 

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் மிஷன் 2024க்குள் செயல்பாட்டு வீட்டுக் குழாய் இணைப்புகள் ((FHTCs) திட்டத்தின் மூலம் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராமப்புறங்களில் செயல்பாட்டு வீட்டுக் குழாய் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஆலோசனை அனுப்பியிருந்தது. இது குறிப்பாக கிராமப்புறங்களில் பொதுக் குழாய்களில் இருந்து தண்ணீர் எடுக்க மக்கள் வெளியே வர வேண்டியதில்லை என்பதால் இது ஊரடங்கு விதிமுறைகளை பராமரிக்க உதவும். கோவிட்-19 ஊரடங்கின் போது கூட, மத்திய அரசு குடிநீர் வழங்கல் தொடர்பான கட்டுமான நடவடிக்கைகளை அனுமதித்தது.

ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், கடந்த ஆண்டு தமிழகத்திற்கு 13.86 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க .373.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 373.10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மாநில அரசு இந்த ஆண்டு மார்ச் வரை 114.58 கோடி ரூபாயை இதற்காகப் பயன்படுத்தியுள்ளது. 2020-21 நிதியாண்டில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 917.44 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் சேகாவத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கு 1,181.53 கோடி ரூபாய் மத்திய நிதி கிடைப்பதாக தமிழகம் உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 1.27 கோடி கிராமப்புற வீடுகளில், 21.85 லட்சம் வீடுகளில் ஏற்கனவே செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகள் உள்ளன. இந்த ஆண்டு, 34 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீரை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனாவின் கீழ் உள்ள அனைத்து 117 கிராமங்களுக்கு 100 சதவீதமும், முக்கிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் எஸ்சி / எஸ்டி 90 சதவீதம் ஆதிக்கம் செலுத்தும் வாழ்விடங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 78 சதவீதம் குழாய் இணைப்புகளைக் கொண்ட சிவகங்கை, 61 சதவீதம் வேலூர், 58 சதவீதம் வீட்டு இணைப்புகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நடப்பு ஆண்டில் 100 சதவீதம் குழாய் இணைப்புகள் கிடைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஜல் ஜீவன் இயக்கத்துடன் இணைந்து, நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் நோக்கத்திற்காக மழைநீரை சேமிப்பதற்காக ஏரி, குளங்களைத் தூர்வாரவும் வலுப்படுத்தவும் குடிமராமத்துப் பணிகளும் செயல்படுகிறது. குடிமராமத்துப் பணிகளின் கீழ், நீர் வளங்களை மீட்டெடுப்பதற்காக, 1829 பணிகளுக்கு சுமார் 500 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் 3.58 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 பணிகள் பெரம்பலூரில் செயல்படுத்தப்படுகின்றன. பெரம்பலூரில் உள்ள கீழாபுலியூர் ஏரி வலுப்படுத்தும் பணிகள் .29 லட்ச ரூபாய் மதிப்புடையவை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டப் பணிகள் இப்போது தமிழ்நாட்டில் நீர்வளக் குழாய் இணைப்புப் பணிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. திருச்சிரப்பள்ளி அல்லிதுரை கிராமத்தைச் சேர்ந்த திருமதி முத்துலட்சுமி கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம் பாதுகாப்பான சமூக விலகல் விதிமுறைகளைப் பேணுகிறது பெண்கள் தொலைதூர இடங்களிலிருந்து பானைகளில் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால், . கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அனைத்து குடிமக்களுக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மழை நீர் சேகரிப்பு, மரக்கன்றுகளை நடவு செய்தல், ஏரிகள், குளங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை நீக்குதல், தூர் வாருதல், ஆகியவை ஒவ்வொரு மட்டத்திலும் தண்ணீரைச் சேமிக்கவும், பாதுகாக்கவும் உதவும். மேலும் ஒவ்வொரு குடிமகனும் தானாக முன்வந்து இந்த வாழ்வாதாரம் காக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். இந்த இயக்கத்தின் பெயரே குறிப்பிடுவதைப் போல, JAL என்பது ஜீவன் என்பதை உணரலாம், தண்ணீரே வாழ்க்கை.


(Release ID: 1639797) Visitor Counter : 1573


Read this release in: English