புவி அறிவியல் அமைச்சகம்

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் 2020 ஜூலை 18 - 21 வரையில் தீவிர மழை

Posted On: 17 JUL 2020 7:30PM by PIB Chennai

புதுடெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் மத்திய / பிராந்திய வானிலைய ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்புகள்:

பருவமழைக்கால காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வழக்கமான அமைவிடத்தைக் காட்டிலும் தெற்காக நிலவுகிறது. நாளை ஜூலை 18 முதல் அது வடக்கு நோக்கி படிப்படியாக நகர்ந்து இயமலைப் பகுதிக்கு செல்லக்கூடும்.

  • மேலும், வங்காள விரிகுடாவில் இருந்து தெற்கு நோக்கிய / தென் மேற்கு நோக்கிய ஈரப்பதமான காற்று  வடகிழக்கு, கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவில் அரபிக் கடலில் குறைவான வளிமண்டல நிலையில் சேருவது நாளை ஜூலை 18இல் இருந்து தொடங்கலாம்.
  • மேலே குறிப்பிட்ட சாதகமான வானிலை சூழ்நிலைகள் காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் முறையே ஜூலை 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் மழைப் பொழிவு பரவலாகவும், தீவிரமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
  • ஓரளவுக்கு பரவலானது முதல் பரவலான நிலை என குறிப்பிடும் அளவு வரையில் மழைப் பொழிவு பின்வரும் வகையில் இருக்கும்:

 

  1. 2020 ஜூலை 18-20 காலகட்டத்தில் வடமேற்கு இந்தியாவில் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 18-21 காலகட்டத்தில் இது மாதிரி மழை இருக்க வாய்ப்பு உள்ளது.
  2. மேற்கு வங்கம் இமயமலைப் பகுதியை ஒட்டிய பகுதிகள், சிக்கிம் மற்றும் அசாம், மேகாலயா பகுதிகளில் ஜூலை 19 - 21 காலகட்டத்தில் தீவிர கனமழை ஆங்காங்கே பெய்ய வாய்ப்புள்ளது. அருணாச்சலப் பிரதேசம் பகுதியில் ஜூலை 19-21 காலக்கட்டத்தில் இதுபோன்ற மழைப் பொழிவு இருக்கலாம்.

 

மாவட்ட அளவிலான வானிலை முன்னறிவிப்புகளுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின், மாநிலங்களில் உள்ள வானிலை ஆய்வு மையங்கள் / வட்டார வானிலை ஆய்வு மையங்களின் இணையதளங்களை அன்புடன் காணுங்கள்.

 

 

*****



(Release ID: 1639460) Visitor Counter : 215