புவி அறிவியல் அமைச்சகம்
வடஇந்தியப் பகுதிகளில் ஜூலை 9 முதல் 12 வரை கனமழை பெய்யும்
Posted On:
08 JUL 2020 7:25PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை கணிப்பு மையம் / பிராந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது:
தென்மேற்கு பருவமழை இமயமலை அடிவாரத்தை நோக்கி வடக்கு முகமாக ஜூலை 9-ந் தேதியன்று திரும்பக் கூடும். மேலும் ஜூலை 9 முதல் அரபிக்கடலிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்று வடமேற்கு இந்தியாவுடன் இணையக்கூடும். இந்த சூழலினால், இம்மாதம் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை, மேற்கு இமாலயப் பகுதி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் வடக்குப் பகுதிகள், சண்டிகர், உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிமில் உள்ள இமாலயப் பகுதி, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக் கூடும்.
*****
(Release ID: 1637509)
Visitor Counter : 173