சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இ-ஸ்கில் இந்தியா ஆன்லைன் டிஜிட்டல் திறன் பயிற்சி, ஊரடங்குக் காலத்தில் நயமான பாதுகாப்பு
Posted On:
03 JUL 2020 11:07AM by PIB Chennai
தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skill development corporation –NSDC) பல்வேறு திறன்கள் குறித்த இ-ஸ்கில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று கல்வி நிலையங்கள் கோடை விடுமுறையை நீட்டிக்க காரணமாகியுள்ளது. தற்போதைக்கு பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பது பாதுகாப்பானதல்ல. கோவிட்-19 பரவலைத் தடுக்க பயிற்சி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் வகுப்புகள், இணையதளம் சார்ந்த பயிற்சி ஆகியவை வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடியே, பாதுகாப்பான திறன் பயிற்சியை வழங்கி வருகின்றன.
தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகம், மத்திய நிதி அமைச்சகத்தால் 2008-ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதில் 49 விழுக்காடு பங்குகள் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், எஞ்சியவை தனியாருக்கும் சொந்தமானவை. தரமான தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் மேம்பாட்டை ஏற்படுத்துவதை தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இ-ஸ்கில் இந்தியா வர்த்தகத்தை நுகர்வோருக்கு திறன்களை மேம்படுத்த -B2C இணையதள இ-கற்றல் தளங்கள் ஒருங்கிணைக்கிறது. இந்தத் தளங்கள் இ-கற்றல் முறைக்கு ஆதாரமாக விளங்குகின்றன. திறன்கள் குறித்த தங்கள் வலிமைகளை பல்முனை இ-கற்றல் பயனாளிகள் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கிறது. இ- ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ், பிஎம் ஆரோக்ய மித்ராவுக்கு ஆன்லைன் படிப்புகள் நடத்தப்படுகின்றன. பிஎம் ஆரோக்ய மித்ராவாக உருவாகத் தேவைப்படும் திறன்கள், அறிவு, அணுகுமுறைகளை வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்ய மித்ரா என்பது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளைத் தொடர்பு கொள்ளும் சேவையை மேற்கொள்ளும் சுகாதாரச் சேவை தொழில்முறையாளர்களைக் குறிக்கும். ஆரோக்ய மித்ராவுக்கான இ-ஸ்கில் திட்டத்தை நிறைவு செய்த பின்னர், பயிற்சி பெற்றவர்கள், பயனாளிகளுக்குப் பொருத்தமான ஆயுஷ்மான் பாரத் தகவல்களை அளிப்பது, நோயாளிகளுக்கு உரிமைக் கோரிக்கைகளைப் பதிவு செய்வது போன்ற உதவி தரும் மேலாண்மை இயக்கத்தை மேற்கொள்ளலாம். இதேபோல, அழகுக்கலை நிபுணர், அடிப்படை மின்பயிற்சி, கணினி வன்பொருள் பழுதுபார்த்தல், கணினி அடிப்படை, தோற்ற மேலாண்மை ஆகிய பிரபலமான ஆன்லைன் படிப்புகளும் உள்ளன. இந்தப் படிப்புகளை என்எஸ்டிசி இலவசமாக வழங்குகிறது. தையற்கலை, மருந்துப்பொருள்கள் விற்பனை பிரதிநிதிகள், பணி தயார்நிலை, சில்லரை விற்பனை உதவியாளர் போன்ற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், இதர மாநிலங்கள், வெளிநாடுகள் ஆகியவற்றிலிருந்து திரும்பியவர்களுக்குத் சிறப்புத் திறன் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. திறன் பயிற்சி பெற விரும்புபவர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் www.tnskill.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். இக்கழகம், 160 அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி அளிப்பவர்கள் மற்றும் 385 பயிற்சி மையங்கள் மூலம், பி.எம். கவுசல் விகாஸ் யோஜனாவை நடைமுறைப்படுத்தி வருகிறது. அனைத்துப் பயிற்சி நிலையங்களும் பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் திறன் பயிற்சி பயன்படுத்தப்பட வேண்டும். திறன்களையும், அறிவையும் பெறுவது வாழ்க்கை முழுவதும் நடைபெறும் தொடர் நிகழ்வாகும். கோவிட்-19 தொற்றால் கூட இதைத் தடுக்க முடியாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தனக்குத்தானே மறுகண்டுபிடிப்பு செய்து கொள்கிறது. உலகம் முழுவதும் தற்போது, ஆன்லைன் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கற்றல் முறை மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்திய அரசின் ‘’இ-ஸ்கில் இந்தியா- எங்கும் எப்போதும் ஸ்கில்லிங்’’ நிச்சயமாக உலகத்தரம் வாய்ந்த முன்முயற்சியாகும். நாடு பெருந்தொற்றையும், அதன் காரணமான பொதுமுடக்கத்தையும் சந்தித்து வரும் இந்நிலையில் ,திறன் பயிற்சி வழங்குவது நயமான பாதுகாப்பாக மாறியுள்ளது.
(Release ID: 1636087)
Visitor Counter : 245