சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பிரதமரின் ஏழைகள் நலன் திட்டம்: முடக்க காலத்தில், ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் 20.62 கோடி பெண்களுக்கு ரூ.30,952 கோடி உதவி.

Posted On: 30 JUN 2020 6:42PM by PIB Chennai

கோவிட்-19 முடக்கக் காலத்தில்,  பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு நிதியுதவியாக ரூ.500-ஐ மத்திய அரசு வழங்கியது.  ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் 20.62 கோடி பெண் பயனாளிகளுக்கு, ஏப்ரல் மாதம் முதல் ஜூன், 2020 வரை ஒவ்வொரு மாதமும் ரூ.500 வழங்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ், ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 3 மாதங்களில் ரூ.30,952 கோடி வழங்கப்ட்டது.     

முடக்கக் காலத்தில் நிதியுதவி அளிக்கும் அரசின் நடவடிக்கையை பெண்கள் மனப்பூர்வமாக வரவேற்றுள்ளனர். பெரும்பாலான கிராமங்கள் மற்றும் ஏழை வீடுகளில், பெண்கள் வீட்டு வேலைகளை கவனிப்பதோடு, வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த திருமதி. லெட்சுமி கூறுகையில், வீட்டில் பெண்கள் தான் உண்மையான நிதிக் கட்டுப்பாட்டாளர்கள். பணம் இல்லை என்றால், வீட்டுத்தோட்டத்தில் உள்ள கீரையை சாதத்துடன் சமைப்பர். வருமானம் கிடைத்தால், இதர உணவுகளைச் சாப்பிடுவர். குடும்ப உறுப்பினர்களுக்கு குறைந்தது 2 வேளை உணவு அளிக்கும் பொறுப்பு பெண்களுடையது. அரசால் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதற்கு கூடுதலாக, ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு, பணம் வழங்க அரசு எடுத்த முடிவு, ஏழைகளுக்கு உண்மையிலேயே உதவியாக இருக்கிறது. ஜன்தன் பணம் பெற்ற அனைத்துப் பெண்களும், மத்திய அரசின் செயலுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், முடக்கக்காலத்தி்ல் வேலை கிடைக்காததால், அரசு இன்னும் அதிக உதவிகள் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியறுத்துகின்றனர்.  

முடக்கக்காலம் நீட்டிக்கப்படுவதால், இந்த நிதியுதவியை அரசு நீட்டிக்க வேண்டும் என கரூர் ரஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி இந்திராணி வேண்டுகோள் விடுத்துள்ளார். கரூர் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. நித்யா, திருச்சிராப்பள்ளி பேரூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி.கஸ்தூரி, திருச்சிராப்பள்ளி மணச்சநல்லூரைச் சேர்ந்த திருமதி. இந்திரா, கரூர் பர்லி கிராமத்தைச் சேர்ந்த திருமதி. லெட்சுமி ஆகியோரும் இதே போன்ற வேண்டுகோளை விடுப்பதோடு, வாழ்வாதாரத்துக்கு உதவிய அரசின் நிதியுதவி திட்டத்துக்கு நன்றி தெரிவித்தனர்

கோவிட்-19 முடக்கம் நீட்டிக்கப்படுவதாலும், வெவ்வேறு மாநிலங்களில் பல கட்ட முடக்க யுக்திகள் நிலவுவதாலும், ஏழைகளின் கஷ்டங்களை குறைக்க, அரசுத் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்தி வருகிறது. திடீரென ஏற்பட்ட கோவிட்-19 முடக்கத்தால் உருவாகிய சவால்களை ஏழைகள், பெண்கள், விவசாயிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட சமூகத்தில் பல பிரிவினர் எதிர்கொள்ள,   பிரதமரின் ஏழைகள் நலன் திட்டம் உதவிக்கரம் நீட்டியது.

Image

Indirani Karur

இந்திராணி, கரூர்

 

Image

Nithya Karur

நித்யா, கரூர்

 

Image

Lakshmi Karur

லட்சுமி,  கரூர்

Image

PM Jan Dhan logo

பிரதமரின் ஜன்தன் சின்னம்



(Release ID: 1635400) Visitor Counter : 160