சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியக் குடியரசுக் கட்சியின் (அதவாலே பிரிவு) மூத்த துணைத்தலைவர் திரு.எம்.ஆதிகேசவன் மறைவுக்கு மத்திய இணையமைச்சர் திரு.ராம்தாஸ் அதவாலே இரங்கல்
Posted On:
29 JUN 2020 6:47PM by PIB Chennai
இந்தியக் குடியரசுக் கட்சி (அதவாலே பிரிவு) மூத்தத் துணைத்தலைவரும், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞருமான திரு.எம்.ஆதிகேசவன், 28 ஜுன், 2020 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அவரது மறைவுக்கு இந்தியக் குடியரசுக் கட்சி (அதவாலே பிரிவு) தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சருமான திரு.ராம்தாஸ் அதவாலே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வழக்கறிஞரான திரு.எம்.ஆதிகேசவன், கட்சியின் தீவிர உறுப்பினராகவும், தமிழகம் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
திரு.ஆதிகேசவனின் மறைவு, தமது கட்சிக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் திரு.ராம்தாஸ் அதவாலே, அவரது சேவைகள் என்றும் நினைவுகூறத்தக்கவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், திரு.ஆதிகேசவனின் மறைவு, தனிப்பட்ட முறையில் தமக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும், அவர் மறைந்தாலும், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்களுக்காக ஆற்றிய பணிகள் என்றென்றும் அவரது நினைவைப் போற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
துயரமான இத்தருணத்தில், திரு.எம்.ஆதிகேசவனின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மத்திய அமைச்சர் திரு.ராம்தாஸ் அதவாலே குறிப்பிட்டுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் திரு.ராம்தாஸ் அதவாலே, தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
*****
(Release ID: 1635170)
Visitor Counter : 145