அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தியதுடன், பொன்விழா நினைவு ஆண்டைக் கொண்டாடுவதற்கான தொடர் நடவடிக்கைகளையும் அறிவித்தார்
Posted On:
26 JUN 2020 5:27PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) பொன்விழாவின் நினைவாக அதிகாரப்பூர்வ சின்னத்தை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா அறிமுகப்படுத்தினார். இந்த ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் பொன்விழா ஆண்டு என்பதால், ஆண்டு முழுவதும், 15 முதல் 20 சிறப்பு விரிவுரைகளை வலைத்தளத் தொடராகவும், குறும்படங்கள் திரையிடல் போன்ற பல நடவடிக்கைகளாகவும் ஒவ்வொரு தன்னாட்சி நிறுவனங்களிலும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தன்னாட்சி நிறுவனமும், தங்கள் நிறுவனத்தின் தற்போதைய வசதிகள் மற்றும் இந்த நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளும் பகுதி ஆராய்ச்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிரமாக பங்கேற்கவும் உள்ளீடுகளை வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பேராசிரியர் அசுதோஷ் சர்மா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சின்னம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சமூக, டிஜிட்டல் மற்றும் அச்சு ஆவணங்களில் அச்சிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தன்னாட்சி நிறுவனங்களின் அனைத்து இயக்குநர்களும் புதிதாகத் தொடங்கப்பட்ட பொன்விழா ஆண்டு சின்னத்தை நிறுவனங்களில் நடைபெறும் மாநாடுகளின் பதாகைகளில் முன்னிலைப் படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை 50 ஆண்டுகளாக இருப்பதைப் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிறுவனங்கள் விரிவுரைத் தொடரை DST சின்னத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
******
(Release ID: 1634999)
Visitor Counter : 176