சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தொலை மருத்துவம் - கோவிட்-19 ஊரடங்கு நேரத்தில் நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

Posted On: 27 JUN 2020 7:54PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில், பல்வேறு விதமான சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.   அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், பெண் வணிகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் ஏழைகளின் பாதிப்பைப் போக்க, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தொடங்கியுள்ளதுமருத்துவமனைகளுக்குச் சென்றால்கோவிட்-19 தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் காரணமாக, நீரிழிவு, இதயக் கோளாறு மற்றும் புற்றுநோயாளிகள் போன்ற நாள்பட்ட நோய்களால் அவதிப்படுவோர் கூட, தங்களது வழக்கமான பரிசோதனைகளை ரத்து செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   மிக அவசரத் தேவையாக இருந்தால் தவிர மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம் என மருத்துவர்களே அறிவுறுத்தி வருகின்றனர்.  

பிரதமர் திரு.நரேந்திரமோடி, காணொளி மூலம் ஆற்றிய ஒரு உரையில்தொலைமருத்துவத்தை பெருமளவில் பிரபலப்படுத்தக் கூடிய புதிய வழிமுறைகள் பற்றி யோசிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்இதையடுத்து, இந்தியாவில், தொலைமருத்துவம் மற்றும் தொலை ஆலோசனை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் விளக்கத்தின்படிதொலைமருத்துவம் என்பதுதகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சுகாதாரச் சேவைப் பணியளார்கள், உரிய சுகாதார சேவைகளை வழங்க வேண்டும் என்பதாகும்.   பதிவுபெற்ற மருத்துவர்கள், தொலைபேசி, காணொளிவாட்ஸ்ஆப், முகநூல், ஸ்கைப் அல்லது மின்னஞ்சல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நோயாளிகளுடன் ஆலோசிக்க வேண்டும்.   அனுபவ அடிப்படையில் மருத்துவரின் கணிப்பு, அந்த நோயாளிக்கு தொலைமருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பது, அவரது உடல்நிலைக்கு ஏற்றதா என்பதை முடிவுசெய்ய வழிகாட்டும்.   மாநில சுகாதாரத்துறையின் ஒப்புதலோடு, இந்திய தொலை மருத்துவ சங்கம் , தமிழ்நாட்டில் தொலைமருத்துவ வசதிகளை இலவசமாக வழங்குகிறது.   தமிழ்நாட்டில் தொலைமருத்துவ சேவைகளைப் பெற விரும்புவோர், www.tsitn.org/telemedicine-facilities-in-tamilnadu  website   என்ற இணையதளம் மூலம் பயன்பெறலாம்

திருச்சியில் வசிக்கும் அரசு ஊழியரான திரு.கண்ணன்தாம் ஒரு இதய நோயாளி என்றும், திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ர திருநாள்மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மருத்துவமனையில், புற நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.   அங்குள்ள இருதய சிகிச்சைப் பிரிவிற்கு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை நேரில் சென்று மருத்துவரிடம் காண்பித்து வந்துள்ளார்.   ஆனால், மார்ச் மாதமே, கோவிட்-19 ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்வெளியூர்ப் பயணம் உகந்தது அல்ல என்பதால்மருத்துவரிடம் செல்வதையே அவர் ஒத்திப்போட்டுள்ளார்அத்துடன், மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால், மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்வது உகந்ததாக தெரியவில்லைமருத்துவரை சந்திக்கும் தேதி இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டு, ஜுலை1ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு செல்வதாக இருந்தது.   ஆனால், கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகல், ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலை தான் உள்ளது. இந்த நிலையில், திரு. கண்ணன் போன்ற நோயாளிகளுக்கு தொலைமருத்துவம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.   அவரது ரத்தப்பரிசோதனை, கொழுப்பு அளவு பரிசோதனை, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை விவரங்களை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவைக்குமாறு, திருவனந்தபுரம் மருத்துவமனையில் இருந்து அவருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டதுஉடல் பரிசோதனைக்கான கட்டணம் ரூ.30-, நெட்பேங்கிங் மூலம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டதுஅத்துடன், அவரது பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியிலேயே இதய மருத்துவர் அவரைத் தொடர்புகொண்டு, ரத்தப் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் அவருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.   தேவைப்பட்டால், தொலைபேசி/வாட்ஸ்ஆப் வாயிலாக தொடர்புகொண்டால், மருந்துகள் மாற்றித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக அவசரத் தேவை ஏற்பட்டால், உள்ளூர் மருத்துவரை அணுகுமாறும் அவருக்கு அறிவுரை வழங்குகிறார்.   மருந்துக் கடைகள் அனைத்தும் திறந்திருப்பதால்மருந்து வாங்குவதில் எந்த சிரமமும் இருக்காது என்பதோடுஆன்லைன் முறையில் எந்த சிரமுமின்றி மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம்.   நாள்பட்ட நோயாளிகள், தொடர்ந்து மருந்துமாத்திரைகளை உட்கொள்ளவும், நிலைமை மேம்படும் வரை, மருத்துவரை நேரடியாக சந்திப்பதை தாமதிக்கலாம்

அந்தவகையில், தொலைதூர கிராமங்களில் மூத்த மருத்துவ நிபுனர்களை சந்திப்பது மிகவும் கடிணமான இந்த நேரத்தில்மருத்துவ சிகிச்சை முறையில் தொலைமருத்துவம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.    எனினும், இளநிலை மருத்துவர்கள் இந்த ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி, தங்களது முதுநிலை மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவசர சிகிச்சைகளை வழங்குவதோடுதேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நோயாளிகளை, மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்த்து, சிகிச்சை அளிக்கலாம்.   அனைத்திற்கும் மேலாககோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பயணம் செய்ய முடியாத நோயாளிகளுக்கு, தொலைமருத்துவம்  ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுமருத்துவரை நேரில் சந்திக்கும் போது, அவர் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் கணிவான பேச்சுக்கள், ஒரு நோயாளி விரைவில் குணமடைய அவசியம் என்ற நிலையில்,   இதற்கு முன் இல்லாத வகையில், தொழில்நுட்பம் அதனை சாத்தியமாக்கியுள்ளது

அந்தவகையில், தொலைதூர கிராமங்களில் மூத்த மருத்துவ நிபுணர்களை சந்திப்பது மிகவும் கடினமான இந்த நேரத்தில்மருத்துவ சிகிச்சை முறையில் தொலைமருத்துவம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.    எனினும், இளநிலை மருத்துவர்கள் இந்த ஆன்லைன் முறைகளைப் பயன்படுத்தி, தங்களது முதுநிலை மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவசர சிகிச்சைகளை வழங்குவதோடுதேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நோயாளிகளை, மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சேர்த்து, சிகிச்சை அளிக்கலாம்.   அனைத்திற்கும் மேலாககோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பயணம் செய்ய முடியாத நோயாளிகளுக்கு, தொலைமருத்துவம்  ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுமருத்துவரை நேரில் சந்திக்கும்போது, அவர் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் கணிவான பேச்சுக்கள், ஒரு நோயாளி விரைவில் குணமடைய அவசியம் என்ற நிலையில்,   இதற்கு முன் இல்லாத வகையில், தொழில்நுட்பம் அதனை சாத்தியமாக்கியுள்ளது.       

                                                                                                   *****


(Release ID: 1634826) Visitor Counter : 250