PIB Headquarters

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியம், தற்போது அந்தந்த கிராமத்திலேயே வழங்கப்படுவதால், தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

Posted On: 21 JUN 2020 1:05PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகநகர்ப்புறங்களில் உள்ள தினக்கூலிப் பணியாளர்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் பணியாற்றுவோரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.   எனவே, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும்அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றுடன் ரூ.1,000 நிவாரண உதவியையும், அரசு வழங்கி வருகிறதுஅத்துடன்மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பதுகிராமப்புற மக்களுக்கு உறுதியான வருமானத்திற்கு வகை செய்துள்ளதுதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில்மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்பாசனக் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதுமேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரிநீர்திருச்சியைக் கடந்து டெல்டா பகுதிகளுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில்சிறிய வாய்க்கால்கள் மூலம் தொலைதூரக் கிராமங்கள் வரை தண்ணீர் செல்கிறது.   தமிழ்நாட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்,  31 மாவட்டங்களுக்குட்பட்ட 385 வட்டங்களில் அடங்கிய 12,524 கிராமப் பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஅரசு ஆவணங்களின்படிதமிழ்நாட்டில் 85 லட்சம் வேலை அட்டைகள் வழங்கப்பட்டு,  1 கோடியே 23 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்

ஊதியத்தைப் பெறுவதற்காக, வங்கிகளுக்குச் செல்ல அரசுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.   இந்நிலையில்மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியளார்களுக்கான ஊதியத்தைஒவ்வொரு வியாழக்கிழமையும், அந்தந்த கிராமங்களில் உள்ள பொது இடத்தில்வங்கிப் பிரதிநிதி முன்னிலையில் பட்டுவாடா செய்ய, தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.    சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஊதியத்தைப் பெற்றுச் செல்லுமாறு, மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   இந்த நடைமுறை, ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

திருசசிராப்பள்ளி மாவட்டத்தில் 404 ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக உறுதித் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.   3.27லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 4.61 லட்சம் பேர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்இவர்களுக்கான ஊதியம், ரூ.22 கோடி அளவிற்கு,  வங்கிக் கணக்குகள் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.    அரசு  உத்தரவுகளின் படிகடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுமீண்டும் பணிகள் தொடங்கியிருப்பதால், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவோர் மகிழ்சசி அடைந்துள்ளனர்தங்களது வாழ்வாதாரத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்க ஏதுவாக, வேலை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறுதொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் நாச்சிக்குறிச்சி கிராமத்தில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளைதாமே முன்னின்று செயல்படுத்தி, கண்காணித்து வருவதாகக் கூறுகிறார் பணி மேற்பார்வையாளர் திருமதி.அம்பிகா.   தொழிலாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உறுதி செய்யப்படுவதாகவும் இவர் கூறுகிறார்கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக, மத்திய - மாநில அரசுகளுக்கு இவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.   திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர் திருமதி.ஜெயராணியும்மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.    ஊரடங்கு காலத்தில், கூடுதலாக நிதியுதவி வழங்க வேண்டுமெனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.   மற்றொரு பணி மேற்பார்வையைளரான திருமதி.நீலாவதி ழுறுகையில்,   நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க, அனைத்துத் தொழிலாளர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.    மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகளின் ஒரு பகுதியாகநாச்சிக்குறிச்சி கிராமத்தில், பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன.     இத்திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டி வட்டத்திற்குட்பட்ட கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி.கரும்பாயி  அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.   ஊதியம் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள இவர்தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமெனவும் அரசை வலியுறுத்தியுள்ளார்

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகளால், ஆண்டுக்கு, குறைந்தது 100 நாட்களுக்கு வேலையும், அதற்கான ஊதியமும் உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம்கிராமப்புறப் பொருளாதார நிலை மாறியுள்ளது.  எனவே, இத்திட்டம், மிகுந்த வரவேற்பைப் பெற்ற அரசுத் திட்டமாக கருதப்படுவதுடன்கிராமப்புற வளர்ச்சியில் அந்த கிராம மக்கள் பங்கேற்கவும் வகை செய்கிறது.  

  • கே.தேவிபத்மநாபன், கள விளம்பர அலுவலர், திருச்சிராப்பள்ளி

 

 

 

 



(Release ID: 1633123) Visitor Counter : 544


Read this release in: English