PIB Headquarters

தில்லி காவல் துறை, மத்திய ஆயுதப்படை காவல் துறைகளில் துணை-ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு

प्रविष्टि तिथि: 19 JUN 2020 12:37PM by PIB Chennai

இம்மாதம் 17ஆம் தேதியன்று (17.6.2020) நடைபெற உள்ள, தில்லி காவல் துறை மற்றும் மத்திய ஆயுதப்படை காவல் துறைகளுக்கு, துணை-ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு, 2020-க்கான அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து விவரங்களும், தேர்வாணயத்தின் `சேர்க்கை அறிவிக்கை’யில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

ssc.nic.in என்ற தேர்வாணயத்தின் இணைய தளத்தில், அதாவது ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கான கடைசி தேதி : 16.07.2020.

தெற்கு பிராந்தியத்தில், கணினி அடிப்படையிலான தாள்-1 தேர்வு, செப்டம்பர் 20-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை 12 மையங்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத் மற்றும் வாராங்கல்லிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தத் தகவலை சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணைச் செயலரும், பிராந்திய இயக்குனருமான திரு.கே.நாகராஜா, செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

•••••••


(रिलीज़ आईडी: 1632540) आगंतुक पटल : 228