PIB Headquarters

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்தில் சர்வதேச யோகா தினம்-2020 (ஜூன் 21)

வீட்டில் இருந்தே குடும்பத்தினருடன் யோகா செய்யுங்கள்
இந்திய மருத்துவமுறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு வேண்டுகோள்

Posted On: 17 JUN 2020 11:45AM by PIB Chennai

இந்தியாவில் யோகாவுக்கு சுமார் 5000 ஆண்டுக்கால பாரம்பரியம் இருக்கின்றது. உடல் மற்றும் மனம் இரண்டின் ஒருங்கிணைப்புக்கும் ஆரோக்கியத்தைப் பேணவும் யோகா உதவுகின்றது. இந்தியாவின் முன்னெடுப்பால் 21.6.2015 முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றதுஉலகின் அனைத்து நாடுகளும் யோகா தினத்தைக் கொண்டாடி வருகின்றன. ஆறாவது சர்வதேச தினத்தை நாம் வித்தியாசமாகக் கொண்டாட வேண்டிய சூழலுக்குக் கொரோனா பெருந்தொற்று நம்மை ஆளாக்கியுள்ளது. பொது இடங்களில் பலர் ஒன்று சேர முடியாத இச்சூழலில்வீட்டில் யோகா-குடும்பத்தாருடன் யோகா என்பதே இந்த ஆண்டின் கொண்டாட்ட முறையாகி உள்ளது.

 

புதுச்சேரி அரசின் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகத்தின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு,” உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் தருகின்ற யோகா உடல்-மனம்-ஆன்மா ஆகிய மூன்றின் ஒன்றிணைவுக்கு உதவுகின்றது. ஒரு சில அறுவை சிகிச்சைகளை இளம் வயதில் இருந்தே யோகா செய்து வருவதன் மூலம் தவிர்த்துவிடமுடியும். இதை நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தே கூறுகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக புதுவை அரசு சர்வதேச யோகா தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடி வந்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் காரணமாக கூட்டம் சேர்வதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த ஆறாவது சர்வதேச யோகா தினத்தை பொதுமக்கள் வீட்டிலேயே அனுசரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்”, என்று கூறுகிறார்.

 

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சி அலுவலரும் நிர்வாக அதிகாரியுமான டாக்டர் .இராஜேந்திரகுமார், ”5 ஆண்டுகளாக உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறதுபொதுமக்கள் பலரும் யோகாசனம் செய்யப் பழகி அதன் பலனைப் பெற்று வருகின்றனர்பலரின் ஆரோக்கியத்திற்குக் காரணமாக யோகா இருக்கிறது என்பது மிகையான கூற்றல்லஇந்த வருடம் வரும் ஜுன் 21 அன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணி முதல் 7.45 மணி வரை அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்து கொண்டே குடும்பத்தாருடன் யோகப் பயிற்சியில் ஈடுபடலாம்ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள பொதுவான யோகா நெறிமுறைகள் என்ற வழிகாட்டி அறிவுரைகளைக் கடைபிடித்து இந்த யோகப் பயிற்சியை மேற்கொள்ளலாம்என்று கூறுகிறார்

 

புதுச்சேரி அரசின் வாழ்வியல் முறை மாற்று சுகாதார மையத்தின் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவின் யோகா டாக்டர் .மகேஸ்வரன் யோகா மருத்துவ சிகிச்சையாகவும் பயன்படுகிறதுஅதிலும் குறிப்பாக நாட்பட்ட தொற்றா நோய்களுக்கு யோகாசனம் நல்ல பலன்களை அளிக்கிறதுஎங்களுடைய இந்த யோகா பயிற்சி மையத்திற்கு தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து கொண்டிருந்தனர்கோவிட்-19 ஊரடங்கால் குறைவான அளவிலேயே நோயாளிகள் யோகா சிகிச்சைக்கு தற்போது இங்கு வருகின்றனர்நீரிழிவு, முதுகுத்தண்டுவட தேய்வு, மாதவிடாய் மற்றும் வயதானவர்களின் மூட்டுப் பிரச்சனை ஆகிய 4 உடல்நலக் கோளாறுகளுக்காகவே நிறைய நபர்கள் யோகப் பயிற்சிக்காக இங்கு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

 

கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கப்பட வேண்டும்இன்றைய வாழ்க்கை முறை நமக்கு மனஅழுத்தத்தை உண்டாக்குவதாகவே உள்ளதுமனஅழுத்தம் உடலின் நோய்எதிர்ப்பாற்றலைக் குறைக்கிறதுஎனவே, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும் யோகப்பயிற்சி சிறந்த முன்தடுப்பு நடவடிக்கை ஆகும்யோகாசனம், பிரணாயாமம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் ஆகியன மூச்சுக்குழாய் அடைப்பை நீக்கி தசைகளை வலுவாக்குவதோடு கிருமி வளரும் சூழலையும் குறைக்கின்றனஎனவே இன்றைய காலகட்டத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு போராட்ட உத்தியாக அனைவரும் யோகப் பயிற்சியைக் கைக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மகேஸ்வரன் மேலும் கேட்டுக் கொண்டார்.

 

புதுச்சேரி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவிற்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு டாகட்ர் மகேச்வரன் மற்றும் யோகப்ப யோகா மூலமான சிகிச்சைக்கு வந்தவர்களிடம் கருத்து கேட்டோம்.

 

66 வயதான ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்.பூங்குழலி ஆஸ்துமா பிரச்சனைக்காக இங்கு யோக சிகிச்சைக்கு வந்ததாகவும் யோகப் பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு ஆஸ்துமா குணமானதாகவும் கூறுகிறார்பணியில் இருக்கும் போதே தனக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்ததாகவும் யோக முத்ரா பயிற்சியை மேற்கொண்டதால் இப்பொழுது நிம்மதியாகத் தூங்குவதாகவும் தெரிவித்தார்

 

61 வயதான .சுந்தரராஜ பாஸ்கர் தனக்கு நுரையீரலில் நீர்க்கட்டி இருந்ததாகவும் அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று தனியார் மருத்துவமனையில் கூறியதாகவும் தெரிவித்தார்இந்த யோகா பயிற்சி மையம் குறித்து தெரிந்து கொண்டு இங்கு டிசம்பர் 2019 முதல் யோகா சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மார்ச் 2020ல் அதே தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் நீர்க்கட்டிகள் கரைந்து விட்டதாகக் கூறியதாக சுந்தர்ராஜ பாஸ்கர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

 

70 வயதான எஸ்.ராமகிருஷ்ணன் தைராய்ட், நீரிழிவு மற்றும் சளி பிரச்சனைக்காக யோகப் பயிற்சிக்கு வந்ததாகவும் பயிற்சிக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி மனஉளைச்சல் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 யோகா பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணவும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சையாகவும் பயன்படுகின்றதுஇந்த சர்வதேச யோகா தினத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான யோகப் பயிற்சிகளைத் தெரிந்து கற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து செய்து வருவோம். வருங்காலத்தில் மீண்டும் ஒரு நுண்ணுயிர் நம்மைப் பாதிக்காத வகையில் உடலினை உறுதி செய்வோம்.


(Release ID: 1632036) Visitor Counter : 218