PIB Headquarters
முகமில்லா மதிப்பீடு: 'துரித சேவை மையம்' பிரிவு அமைக்கப்பட்டது.
Posted On:
09 JUN 2020 4:57PM by PIB Chennai
எளிதாகத் தொழில் செய்வதை, குறிப்பாக எல்லைகளைத் தாண்டி எளிதாக வணிகம் செய்வதை, ஊக்குவிக்கும் அரசின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, முகமில்லா மதிப்பீட்டின் முதல் கட்டத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. 08.06.2020 அன்று சென்னை மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்தப் புதிய முயற்சி, இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும், உள்நாட்டுக் கொள்கலன் நிலையங்களுக்கும் மற்றும் விமான நிலையங்களுக்கும் இந்த நாட்காட்டி ஆண்டின் இறுதிக்குள் விரிவுப்படுத்தப்படும்.
மதிப்பீட்டு முறைகளில் முகமறியாத் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சீரானத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு வருவதே முகமில்லா மதிப்பீட்டின் குறிக்கோளாகும். இறக்குமதியாளர்களின் நலனுக்காக, மதிப்பீட்டில் சுங்க அதிகாரியின் உடல் சார்ந்த இடையீட்டின் தேவை இல்லாமல், துரித சுங்கத்தின் (துரந்த் கஸ்டம்ஸ்) குடையின் கீழ் முகமில்லா மதிப்பீட்டை எளிதாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை மற்றும் பெங்களூரு மண்டலத்தின் ஆளுகைக்குள் வரும் அனைத்து சுங்க நடைமுறைகளும் முகமில்லா மதிப்பீட்டின் முதல் கட்டத்தில் வருகின்றன. சுங்கக் கட்டணச் சட்டம், 1975 (இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள்) பகுதி 84 மற்றும் பகுதி 85-இன் கீழ் வரும் பொருள்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட நுழைவு ரசீதுகள் தானியங்கி சுங்க அமைப்பினால் இந்த இரண்டு சுங்க மண்டலங்களில் உள்ள நியமிக்கப்பட்ட அதிகாரிகள் யாருக்காவது முகமில்லா மதிப்பீட்டுக்காக ஒதுக்கப்படும்.
இறக்குமதி துறைமுகத்தில் முகமில்லா மதிப்பீட்டின் கீழ் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளைச் செய்து முடிப்பதில் வணிக சமுதாயத்துக்கு உதவும் பொருட்டு அமைக்கப்பட்ட பிரத்யேகப் பிரிவான 'துரிதச் சேவை மையம்' (துரந்த் சுவிதா கேந்திரா), சென்னை சுங்க மண்டலத்தின் முதன்மைத் தலைமை சுங்க ஆணையர் திரு. வாசா சேஷகிரி ராவ். ஐ ஆர் எஸ்-ஆல் துவக்கி வைக்கப்பட்டது. இந்தப் பிரிவு சுங்க இல்லத்தின் முதல் மாடியில் உள்ள அறை எண் ஜி-110-இல் செயல்படும். உதவி சுங்க ஆணையர் (துரித சேவை மையம்), ஒரு கண்காணிப்பாளர் மற்றும் ஒரு சோதனை அலுவலர் இந்த மையத்தைப் பார்த்துக் கொள்வார்கள்.
சுங்க ஆணையர், சென்னை - இறக்குமதி, திரு. ஆர். ஸ்ரீநிவாச நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின் படி, சுங்கக் கட்டண சட்டத்தின் பிரிவு 84, 85-இன் கீழ் சென்னை மண்டலத்தில் தாக்கல் செய்யப்படும் நுழைவு ரசீதுகளின் மதிப்பீடு தொடர்பான பத்திரங்கள், வங்கி உத்தரவாதங்கள் மற்றும் பற்றைப் பெற்றுக் கொள்வதும், சோதனைக் குறிப்பாணையை உருவாக்கி மாதிரிகளை அனுப்புவதும், ஆவணங்கள்/அனுமதிகள்/சான்றிதழ்களை வரவு வைப்பத்தும், தாமதத் தாக்கல்களுக்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்யக்கோரும் கோரிக்கைகளை பரிசிலீப்பதும், மற்றும் முகமில்லா மதிப்பீட்டால் குறிப்பிடப்படும் எந்த ஒரு தொழில்நுட்ப நடவடிக்கையை செய்வதும் துரித சேவை மையத்தின் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.
(Release ID: 1630504)
Visitor Counter : 254