PIB Headquarters

ஆத்ம நிர்பார் பாரத் சுயசார்பு இந்தியா: பொது முடக்கத்தால் ஏற்பட்ட வேலை இழப்பிலிருந்து மீண்டு வருவதற்காக சுய உதவிக் குழுவினருக்கு பிணையில்லா சிறப்புக் கடன் உதவி

மத்திய தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் 1500 சுய உதவிக் குழுக்களுக்கு 12 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

Posted On: 01 JUN 2020 1:18PM by PIB Chennai

சுயசார்பு இந்தியா சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டிலுள்ள தகுதியுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிணையில்லாக் கடன் 20 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதிமைச்சர் அறிவித்திருந்தார். கோவிட் - 19 பொது முடக்கம் காரணமாக பல குடும்பங்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டன. பிரதமர் ஜன்தன், பிரதமர் கிசான் சம்மான் ஆகிய திட்டங்களின் கீழ் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. மாநில அரசுகள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பண உதவி செய்து வருகின்றன. பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் பொதுமுடக்கக் காலத்தின் போது தகுதியுள்ள குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. பல குடும்பங்களில் பெண்களே பிரதானமாக உள்ளனர். தங்களது கலைத்திறன்களை உபயோகித்து வருமானம் ஈட்டி வந்தனர். சுய உதவிக்குழுக்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிதிகளைப் பயன்படுத்தி நிதி அதிகாரம் கொண்டவர்களாக திகழ்ந்தனர்.

கோவிட்-19 பொதுமுடக்க நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக, தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்புக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன

.

பொதுமுடக்கம் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தக் கடனுதவித் திட்டம் நன்மைளிக்கும் என்று கரூரைச் சேர்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவர் கூறினார். சுய உதவிக்குழு உறுப்பினர் 5,000 ரூபாய் வரை கடன் பெறமுடியும் என்றும், இதை 6 மாத காலங்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார். இத்தொகையை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணம். இந்த சிறப்புக் கடன்கள் மானிவட்டியான 58 பைசாவிற்கு, சுய உதவிக் குழுக்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வழங்கியுள்ளது. தங்க நகைக்கடன் திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றுக்கு 3000 ரூபாய் 7 சதவிகித வட்டியில் வழங்கப்படுகிறது. பொதுமுடக்க காலத்தின் போது நிரந்தர வருவாய் இல்லாத நேரத்தில், இந்த கடன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று திருச்சிராப்பள்ளியை சேர்ந்த திருமதி சுபா கூறினார். மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் அதிகார வரம்பிற்குட்பட்டவை.  மகளிர் சுய உதவிக்குழுக்கள் எந்தவித பிணையும் இன்றி, 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளதற்கு, கரூரின் குளித்தலையைச் சேர்ந்த திரு மோகன்தாஸ் நன்றி தெரிவித்தார்  வாழ்வாதாரத்திற்காக வங்கிகள் தொடர்ந்து முறையாகக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அரியலூர் எத்திராஜ் நகரைச் சேர்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர் திருமதி கலா, பொதுமுடக்க காலத்தின் போது தனக்கும் தனது கணவருக்கும் வேலை இல்லை என்று கூறினார். சுய உதவிக்குழு மூலமாக எந்தவித பிணையும் இன்றி கடன் வழங்கியதற்காக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 39 கிளைகள், 147 ஆரம்ப வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளன. பெரம்பலூரில் 10 கிளைகளும், 53 ஆரம்ப வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் உள்ளன. கரூரில் 15 கிளைகள் மற்றும் 84 ஆரம்பக் கூட்டுறவு வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளன. அரியலூரில் 9 கிளைகளும் , 64 ஆரம்ப வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் உள்ளன. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய நான்கு மத்திய மாவட்டங்களில் மொத்தம் 4520 சுய உதவிக்குழுக்களும், ஆரம்ப வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கீழ் 16 ஆயிரத்து 30 குழுக்களும் உள்ளன. இந்த நான்கு மாவட்டங்களில் தகுதியுள்ள 1500 சுய உதவிக்குழுக்களுக்கு 12 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரியலூர் மாவட்டத்தில் 42 சுய உதவிக் குழுக்களுக்கு 25.75 லட்சம் ரூபாய் சிறப்புக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐந்து உறுப்பினர்களுக்கு பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்க காலத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த காலத்தைப் மறந்துவிட்டு முன்னேறிச் செல்வதற்கு உதவி தேவை. அரசு இந்த உதவிகளை பல சிறப்புத் திட்டங்கள் மூலமாக செய்து வருகிறது. பல பெண்கள் இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டு, பொதுமுடக்க காலத்தால் ஏற்பட்ட நெருக்கடியை துணிவுடன் எதிர்கொள்வதற்கு, சுய உதவிக்குழுக்கள் உதவுகின்றன பொதுமுடக்க கால பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவதற்கு நிதிஅதிகாரம் பெறுவது, பெண்களுக்கு உதவி செய்யும். குடும்பத்தின் எல்லா பொறுப்புகளையும் தங்களது தோள்களில் சுமக்கும் பெண்களுக்கு, பொருளாதார விடுதலை மிகவும் முக்கியமானதாகும்.

          -----  

 



(Release ID: 1628275) Visitor Counter : 777