PIB Headquarters

ஊரடங்கு காலத்தில் A one Stop இணைய-சேவை மையமாக உமாங் மென்பொருள் (UMANG APP) பிரபலமடைகிறது.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் 800க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது.

கொவிட் -19 இன் நெருக்கடியின் போது, மத்திய அரசு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் வரையிலான பான் இந்தியா இணைய-அரசு சேவைகளை அணுக UMANG பயன்பாடு முக்கிய பங்கு வகித்தது.

Posted On: 29 MAY 2020 7:20PM by PIB Chennai

இந்தியாவில் மொபைல் நிர்வாகத்தை இயக்க UMANG (புதிய வயது ஆளுமைக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு.) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் தேசிய இணைய-ஆளுமைப் பிரிவு (NEGD) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பொதுவான, ஒருங்கிணைந்த தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டை உருவாக்க அனைத்து அரசாங்க சேவைகளையும் ஒரே இடத்தில் அணுகுவதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்று உமாங். இது ஒரு முதன்மைப் பயன்பாடாக செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது, இது வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளிலிருந்து முக்கிய அரசு சேவைகளை ஒருங்கிணைக்கும். இந்தப் பயன்பாடு பயனர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அவற்றின் நிறுவனங்களின் மின்-அரசு சேவைகளை அணுக உதவும்.

பயன்பாட்டின் நோக்கம் இந்தியாவில் ஒட்டுமொத்த மொபைல் அடிப்படையிலான சேவை விநியோக சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதுடன் ஒரு செயல்பாட்டாளராக எளிதாகச் செயல்படுவதாகும்.

ஒற்றை மொபைல் பயன்பாடு வழியாக தனிநபர்களுக்கு பல்வேறு சேவைகளுக்கு எளிதான அணுகலையும் இது வழங்குகிறது, குறுகிய குறியீடு மற்றும் ஒற்றைக் கட்டண இலவச எண்ணை நினைவில் கொள்வது எளிது.

இது சேவைகளை எளிதில் கண்டுபிடிப்பது, எளிதில் நிர்வகித்தல் மற்றும் சேவை வழங்கலைத் தரப்படுத்துதல் ஆகியவற்றை வழங்குகிறது.

இந்த மொபைல் பயன்பாட்டு தளங்களில் தங்கள் சேவைகளைக் கொண்டு வருவதன் மூலம் எளிதான மற்றும் விரைவான ஒருங்கிணைப்பு, தளத்துடன் இணைதல் மூலம் அரசுத் துறைகளின் இணைய-அரசு பயன்பாடுகள் / சேவைகள் மற்றும் துறைகளுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட சேவையை உமாங் பயன்பாடு வழங்குகிறது. தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர் மற்றும் கட்டண நுழைவாயிலை ஒருங்கிணைப்பதன் மூலம் பொதுவான தளத்தின் வழியாக இந்த மென்பொருள் செயல்படுகிறது.

'மொபைல் ஃபர்ஸ்ட்' திட்டத்தின் மூலம் தனிநபர்களின் விரல் நுனிகளில் ஆளுகையைக் கொண்டு வருவதற்காக உமாங் கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பல மொழி பயன்பாடு, மொபைல் ஆளுகையை விரைவாகக் கண்காணிக்க உருவாக்கி இயக்கப்படுகிறது. பல மொபைல் பயன்பாடுகளை நிர்வகிப்பதில் பயனர்கள் எதிர்கொள்ளும் அசெளகரியங்களைத் தவிர்ப்பதும், மாறுபட்ட அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கு ஒரே ஒரு தீர்வை வழங்குவதும் இதன் முதன்மை நோக்கமாகும். எனவே, மொபைல் போன்கள் மூலம் தனி நபர்களைச் சென்றடைய, இந்த ஒரு மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குவது தனித்தனியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளை ஒன்றிணைக்க உதவும்.

மொபைல் பயன்பாடு, வலை, தானியங்கி குரல் சேவை (ஐவிஆர்) மற்றும் குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்) போன்ற பல தடங்களில் உமாங் சேவைகள் கிடைக்கப் பெறுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், தனிச்சிறப்பு மிக்க தொலைபேசி, டேப்லெட்டுகள் மற்றும் மேசைக் கணினிகள் மூலம் அணுகலாம்.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் எடுக்கப்பட்ட முன்முயற்சி ங்களை பல படிகள் முன்னேறச் செய்ததாகவும், அரசாங்கங்களின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கான ஒரு தீர்வாக உமாங் பயன்பாடு உள்ளது என்றும் கோயம்புத்தூர் சுந்தரபுரத்தைச் சேர்ந்த ஜீவிதா மேரி தெரிவித்தார். இந்த ஊரடங்கின் போது குடிமக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்துப் பயனாளித் திட்டங்களையும் பெற இந்த பயன்பாடு மிகவும் பயனளித்தது.

இந்த தொற்றுநோயின் போது உயிர்களைப் பாதுகாக்க இந்திய அரசு மேற்கொண்ட மகத்தான முயற்சியை கோயம்புத்தூரைச் சேர்ந்த திருமதி சுமா பாராட்டினார். இந்த ஊரடங்கின் போது அறிவிக்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களையும் அணுக ஒரு தனித்துவமான தளமாக உமாங் பயன்பாடு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். மக்கள் எந்தவொரு மன அழுத்தமும் இல்லாமல், வீட்டில் இருந்தபடி இந்த நன்மைகளைப் பெற இது உதவி செய்கிறது.

13 இந்திய மொழிகளில் கிடைக்கும் இந்த பன்மொழிப் பயன்பாட்டை கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெகதீசன் பாராட்டுகிறார். இந்தப் பயன்பாட்டின் மூலம், மாநில மற்றும் மத்திய அரசுகளின் 127 துறைகளின் 800க்கும் மேற்பட்ட சேவைகளை அணுக முடியும். அதில் ஆதார், பாரத் பில்பே, வரி செலுத்துதல், பிறப்புச் சான்றிதழ், பயண ஆவணங்கள், பாஸ்போர்ட் போன்றவை அடங்கும். கோயம்புத்தூரைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் கூறுகையில், நாட்டுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மனதில் வைத்து இந்தப் பயன்பாடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கின் போது இந்தப் பயன்பாட்டை மிகவும் உதவிகரமாகக் கண்டறிந் மற்றொரு பயனாளியான ராம்குமார், அதை தனது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிந்துரைப்பதாக உறுதியளித்தார். எனவே, உமாங் பயன்பாடு பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் 24x7 அரசு இணைய அலுவலகமாக செயல்படுகிறது, மேலும் இந்த டிஜிட்டல் இந்தியா முயற்சி ஊரடங்கின் போது நாட்டுமக்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.

அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கான ஒரு தீர்வு உமாங் பயன்பாடு என்று ஜீவிதா மேரி கூறுகிறார்.

மாங் பயன்பாடு பொதுமக்களுக்கு 24x7 சேவையை வழங்குகிறது என்று ஜெகதீன் கூறுகிறார்.

விஷ்ணு பிரசாத் கூறுகையில், இந்த பயன்பாடு நாட்டுமக்களின் சிரமங்களை மனதில் வைத்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா நெருக்கடியில் இந்தப் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் ராம்குமார்.

***********************



(Release ID: 1627891) Visitor Counter : 232


Read this release in: English