PIB Headquarters

மாணவர்கள் இணையம் மூலம் நண்பர்களைப் பெறும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆலோசனையாக CBSE, சைபர் பாதுகாப்பு கையேட்டை வழங்கத் தொடங்கியது.

Posted On: 25 MAY 2020 7:14PM by PIB Chennai

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த வாரம் சைபர் பாதுகாப்புக் கையேட்டை வெளியிட்டது இது இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கானது. புதுடில்லியில் கையேட்டை வெளியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மாணவர்கள் மத்தியில் சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் தயாராக உள்ளதாகக் கூறினார். இணைய அச்சுறுத்தல், சமூக விலக்கு, மிரட்டல், அவதூறு, உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல், இணைய பாலியல் துஷ்பிரயோகம், இணைய தீவிரமயமாக்கல், இணையத் தாக்குதல், மோசடி மற்றும் இணையத்திற்கு அடிமையாவதைத் தவிர்த்தல் போன்ற இணையப் பாதுகாப்பு தலைப்புகள் இந்த கையேட்டில் உள்ளன.

டிஜிட்டல் அணுகல், கல்வியறிவு, தகவல் தொடர்பு, நல்ல பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, உரிமைகள், சுதந்திரம் மற்றும் பொறுப்பு, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய டிஜிட்டல் மயமாக்கலின் ஒன்பது கூறுகளையும் இது அறிமுகப்படுத்தும்.

இடைநிலைக் கல்விக்கான மத்திய வாரியம் - CBSE கையேடு இணைய அச்சுறுத்தல் மற்றும் இணையப் பின் தொடரல் ஆகியவற்றை விளக்குவதுடன் இணையத்தில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நல்ல நடைமுறைகள் பற்றிய விவரங்களையும் வழங்குகிறது.

ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அதிக அளவில் டிஜிட்டல் பயன்பாட்டைப் பெறுவதால், இணையத்தில் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் மற்றும் சட்டவிரோதச் செயல்களைப் புகாரளிக்க மாணவர்களுக்கு பயனுள்ள தொடர்புகள் இந்த கையேட்டில் உள்ளன.

கொரோனா வைரசினால் ஏற்பட்ட ஊரடங்கின் போது, ​​கல்லூரிகள் / பள்ளிகள் இணைய வகுப்புகளை நாடுகின்றன, இதன் மூலம் மாணவர்கள் பிற டிஜிட்டல் அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர். இதுவே, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த சைபர் பாதுகாப்புக் கையேட்டை வழங்க CBSE -ஐ தூண்டியது. இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்களைத் தருவதுடன் த்தகைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை மற்றும் பிற வழிகாட்டுதல்களைப் பட்டியலிடுகிறது.

இது குறித்த கருத்துக்களை கோயம்புத்தூரின் FOB -க்கு அளிக்கும் போது, ​​நகர காவல் ஆணையர் திரு சுமித் சரண் IPS, பதின்பருவ குழந்தைகளுக்கு இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவது CBSE -யின் ஒரு நல்ல முயற்சி என்று கூறினார். இந்தியாவில் டிஜிட்டல் உபயோகத்திற்கு குறைந்தபட்ச வயது வரம்பு இல்லாததால், காவல் துறை குறிப்பாக கோவையில் உள்ள சைபர் கிரைம் செல், இணைய அத்துமீறல்கள் மற்றும் புகார்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கோயம்புத்தூர் நகர காவல்துறை பள்ளிகளில் ஒரு பெரிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது, இணையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 14 முதல் 18 வயதுடையவர்கள், அவர்கள் தெரிந்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வெளிப்படையான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. எனவே இணைய உறவுகளின் ஆபத்துகள் குறித்து அவர்கள் உணர வேண்டும், என்றார்.

ஊரடங்கின் போது, ​​குழந்தைகள் இணைய வகுப்புகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பது பெற்றோரின் முக்கியமான கவலையாக இருந்தது. கோயம்புத்தூரில் உள்ள பள்ளிகள் இணைய வகுப்புகள் மூலம் பாடங்களை முடிப்பதன் வாயிலாக கல்வியாண்டுக்குச் சென்றது, குழந்தைகள் ஊரடங்கிற்குப் பின் பள்ளிகளில் சேரும் போது அவர்களுக்கு சுமை இல்லாமல் இருப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த இணையப் பாதுகாப்புக் கையேட்டை பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்கின்றனர்.

ஆன்லைனில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை குறித்து மாணவர்கள் அறிய இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும் என்று கோயம்புத்தூரின் சூலூரைச் சேர்ந்த திருமதி. தனலட்சுமி கூறுகிறார். இந்த முயற்சிக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இணையத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த நுண்ணறிவைக் கொண்ட இந்த சைபர் பாதுகாப்புக் கையேடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ நவமி கூறுகிறார். நீட் தேர்வுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் பயன்பாட்டைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

சைபர் பாதுகாப்பு கையேட்டின் உள்ளடக்கங்கள் டிஜிட்டல் அணுகல், டிஜிட்டல் கல்வியறிவு, டிஜிட்டல் தகவல் தொடர்பு, டிஜிட்டல் வர்த்தகம், டிஜிட்டல் ஒழுக்கங்கள், டிஜிட்டல் ஆரோக்கியம், டிஜிட்டல் உரிமைகள், சுதந்திரம், பொறுப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றை மிக எளிய மொழியில் விளக்குகிறது. இதன் மூலம் இளைஞர்கள் உலகைச் சிறந்த வழியில் புரிந்து கொள்கிறார்கள். ஊரடங்கின் போது மட்டுமல்லாமல், கல்வித்துறை குறிப்பாக பள்ளிகள் டிஜிட்டல் வகுப்புகளை ஒரு முக்கிய தகவல் தொடர்பு முறையாக மாற்றுவதற்கு தயாராகி வருகின்றன, மேலும் சைபர் பாதுகாப்புக் கையேட்டை CBSE அறிமுகப்படுத்துவது மாணவர்கள் இணையக் குற்றங்களுக்கு இரையாகாமல் தடுக்க ஒரு சரியான மற்றும் அக்கறையுள்ள முயற்சியாகும்.

C (1).jpeg

இணைய நட்பை உணர்ந்து கொள்வது நல்லமுயற்சி என்று போலீஸ் ஆணையர் கூறுகிறார்.

தனலட்சுமி கூறுகையில், ஆன்லைனில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவற்றைக் கற்றுக்கொள்ள கையேடு மாணவர்களுக்கு உதவுகிறது என தெரிவித்தார்.

C (5).jpeg

ஸ்ரீ நவமி கூறுகையில், ஆன்லைனில் சாத்தியமான ஆபத்துகள் பற்றிய நுண்ணறிவை கையேடு வழங்குகிறது என்றார்.

*******


(Release ID: 1626801) Visitor Counter : 448


Read this release in: English