சுற்றுலா அமைச்சகம்

சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் 23வது இணைய கருத்தரங்கு ‘எனது தேசத்தை பார்’ என்ற தொடரின் கீழ் ‘சைக்கிள் பயணங்கள்’ மூலம் இந்தியாவை சுற்றிப்பார்த்தல்

Posted On: 24 MAY 2020 7:00PM by PIB Chennai

இந்தியாவின் புவியியல் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார செழிப்பை வெளிப்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சகம் ‘எனது தேசத்தைப் பார்’ என்ற இணையக் கருத்தரங்கு தொடரை மே 23, 2020ம் தேதி நடத்தியது. இதற்கு ‘சைக்கிள் சுற்றுப் பயணம் – பெடல் மிதித்து இந்தியாவை சுற்றிப்பார்த்தல்’ என தலைப்பிடப்பட்டிருந்தது.  இந்தியாவின் ஒவ்வொரு அம்சத்தையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கையையும் அறிய சைக்கிள் பயணங்கள்தான் சிறந்த வழி என்பதை வெளிகாட்டும் வகையில் இந்த இணையக் கருத்தரங்கில் விரிவாக விளக்கப்பட்டது.

சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை இயக்குனர் திருமதி. ருபிந்தர் பிரார் தலைமையில் நடந்த இந்த 23வது இணையக் கருத்தரங்கை திரு குர்தீப் ராமகிருஷ்ணா மற்றும் திருமதி தேஜஸ்வினி் கோபால்சாமி (அன்வென்சர்ட் எக்ஸ்படிசன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்கள்) வழங்கினர்.

‘சைக்கிள் பயணம் ஏன்?’ என்பதை மையமாக வைத்து 5 விரிவான பிரிவுகளாக கருத்தரங்கில் விளக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு நிலஅமைப்பு, ‘சைக்கிள் 101’ போன்ற வீடியோக்கள் மூலம் சைக்கிள் பயணத்தில் முக்கிய அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. சைக்கிள் பயணத்தை ஆர்வத்துடன் தொடங்குவது, தொடக்க நிலையாளர்களுக்கான ஆலோசனை, பெண் சுற்றுலாப் பயணிகள் உட்பட சைக்கிள் பயணத்துக்குத் திட்டமிடுவது, இந்தியாவின் 5 பிரபல சைக்கிள் சுற்றுலாத் தலங்களான மணாலி முதல் லே வரையிலான பைக் பயணம், கிழக்கு இமயமலைப் பகுதிகள், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தென்னிந்தியா, ஹம்பி மற்றும் பதாமி பற்றியும் விளக்கப்பட்டன.

இந்த இணையக் கருத்தரங்கு கூட்டங்களை https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Z0_ZEHDA/featured என்ற இணைய முகவரியிலும், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சமூக இணையதளங்களிலும் காணலாம்.

எனது தேசத்தைப் பார் என்பது பற்றிய அடுத்த இணையக் கருத்தரங்கு, ‘பண்பாடு மற்றும் சுற்றுலா’ – கோவா பொருளாதாரத்தின் இரு பக்கங்கள்’ என்ற தலைப்பில் மே 26, 200ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. இதற்கு பதிவு செய்ய https://bit.ly/2XqNdad என்ற இணைய முகவரியை கிளிக் செய்யவும்.  



(Release ID: 1626717) Visitor Counter : 236


Read this release in: English