PIB Headquarters

வந்தே பாரத் திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தியது சென்னை சுங்கத்துறை.

Posted On: 15 MAY 2020 9:03PM by PIB Chennai

கோவிட்-19 காரணமாக 20. 3. 2020 முதல் அனைத்து சர்வதேசப் பயணிகள் விமானங்களும், அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்திய நாட்டவர்கள் பயணம் செய்வதற்கும், இதர நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிலிருந்து தத்தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான நிவாரண விமானங்கள் அரசு ஒப்புதலோடு இயக்கப்படுகின்றன. பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வந்தே பாரத் மிஷன் இயக்கத்தைத் துவக்கியது. முதல்கட்டமாக 8.5 2020 லிருந்து 13. 5. 20 20 வரை திட்டமிடப்பட்டிருந்தது. முதல் கட்டமாக 11 விமானங்கள் தமிழ்நாட்டிற்கும் ஒன்பது விமானங்கள் சென்னைக்கும் வரவிருந்தன. தாமதம் காரணமாக, இறுதி விமானமான, ஒன்பதாவது விமானம், லண்டனிலிருந்து இன்று காலை 333 பயணிகளுடன் வந்தடைந்தது. முன்னதாக 8 விமானங்கள் துபாய் 2 விமானங்கள்; குவைத், கோலாலம்பூர் (மலேசியா), மஸ்கட் (ஓமான்) சிகாகோ (USA), பங்களாதேஷ் மற்றும் மணிலா (பிலிப்பைன்ஸ்) ஆகிய இடங்களிலிருந்து தலா ஒரு விமானம் வந்தடைந்தன. மொத்தம் 1691 பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். இதில் 1008 பேர் ஆண்கள் 574 பேர் பெண்கள். 19 குழந்தைகள்.

 

 

விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன், இந்தப் பயணிகள் அனைவருக்கும் சுகாதாரத் துறையின் குழுவினரால் காய்ச்சல் உள்ளதா என்றும், கோவிட் நோய் தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் தெரிகின்றனவா என்று சோதித்துப் பார்க்கப்பட்டது. குடியேற்றப்பிரிவு அனுமதி வழங்கிய பின்னர், இந்தப் பயணிகள், வருகைக்கூடத்தில் உள்ள சுங்கப்பகுதிக்கு வந்தடைந்தனர். சென்னை சுங்கத்துறை, இந்தப் பயணிகளும் அவர்களின் உடைமைகளும் சுமுகமாக வெளியேற உதவியது. பரிசோதனைக்குப் பின்னர் சுங்க வருகைக் கூடத்தில் கட்டாயமான அமைப்பு ரீதியிலான தனிமைப்படுத்துதலுக்காக தாங்கள் விரும்பும் வகையைத் தேர்ந்தெடுக்கும் கவுண்டர்கள் வழங்கப்பட்டன. கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தும் வசதியை பயணிகள் தேர்வு செய்துகொள்ளலாம். ஏ, பி, சி பிரிவுகள் என தங்குவதற்காக மூன்று விதமான வசதிகள் உள்ளன. பயணிகள் அனைவரும் 14 நாட்களுக்கு கட்டாயமாக அமைப்பு ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். விமான நிலைய வருகைக் கூடத்தில் இருந்து வெளியேறிய பிறகு, ஒவ்வொரு பயணியிடமிருந்தும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. மாதிரிகளைக் கொடுத்த பின்னர், பயணிகள் .தாங்கள் தேர்வு செய்து கொண்ட, தனிமைப்படுத்தும் வசதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கென மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்த கோவிட்-19 தொடர்பான பல்வேறு முகமைகளுடன்,  சுங்கத்துறை,  நல்ல முறையில் ஒருங்கிணைந்து பணியாற்றியது

 

 

 



(Release ID: 1624186) Visitor Counter : 136


Read this release in: English