PIB Headquarters

மலேசியாவில் இருந்து, வந்தே பாரத் திட்ட (#VandeBharatMission) விமான சேவைக்கு சென்னை சுங்கத் துறை திங்கள்கிழமை ஏற்பாடு.

Posted On: 12 MAY 2020 1:54PM by PIB Chennai

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நான்காவது குழுவின் விமானப் பயணத்துக்கு சென்னை விமான நிலையத்தில் மே 11ஆம் தேதி சென்னை சுங்கத் துறை எளிமையான வகையில் ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது. மலேசியாவில் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 687 என்ற அந்த விமானம் இரவு 11.10 மணிக்கு சென்னையில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

            மலேசியாவில் இருந்த இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்த அந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர். அதில் 58 ஆண்கள், 119 பெண்கள், 3 குழந்தைகள் இருந்தனர். 3 பயணிகள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர். அனைவருக்கும் சுங்கத் துறை அனுமதிகள் எளிதாக அளிக்கப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

            கோவிட்-19 நோய்த் தாக்குதல் சூழ்நிலையில் மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து அனைத்து சர்வதேச விமானச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அழைத்து வருவதற்கான மத்திய அரசின் திட்டம் மே 7 முதல் மே 13 வரை செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் சென்னைக்கு 11 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், அடுத்த சில நாட்களில், வங்கதேசம், அமெரிக்கா, பிரிட்டன், ஓமன், கோலாலம்பூர், பிலிப்பைன்ஸில் இருந்து விமானங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வரவுள்ளன.

 

 

 

 

 

***



(Release ID: 1623224) Visitor Counter : 267


Read this release in: English