PIB Headquarters

குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உதவுகிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தொழிலாளர்களுக்கு 4684 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

Posted On: 07 MAY 2020 6:20PM by PIB Chennai

ஒரே நேரத்தில் எவருடைய பங்களிப்பும் இல்லாமல் தொழிலாளர்களால் மின்னணு மூலம் செலுத்தும் ரசீதை (ECR) தாக்கல் செய்யமுடியும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கொவிட்-19 ஊரடங்கின் போது இந்தத் தளர்வு தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய உதவியாக உள்ளது. ECR மூலம் வருமானத்தை தாக்கல் செய்வது இப்போது சட்டரீதியான மாதாந்திரப் பங்களிப்புகளிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாக திருச்சிராப்பள்ளியின் EPFO அதிகாரி தெரிவித்தார். சரியான நேரத்தில் ECR தாக்கல் செய்வது தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களின் பங்களிப்பை வரவு வைக்க உதவும்.

பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக, குறைந்த ஊதியம் பெறும் EPF உறுப்பினர்களின் நலனுக்காகவும், நூறு ஊழியர்கள் வரை பணியாற்றும் EPF உள்ளடக்கிய நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், 15000 ரூபாய்க்கும் குறைவான மாத வருமானமுடையோரின் யுனிவர்சல் கணக்கு எண்ணில் இருந்து (UAN) மூன்று மாதங்களுக்கான 24 சதவீத ஊதியத்தை, EPF மற்றும் EPS தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. நிறுவனங்கள் தகுதி வாய்ந்த தொழிலாளர்கள் அவர்களது சேமிப்புத் தொகையை பெற ECR தாக்கல் செய்வதன் ஒரு பகுதியாக மின்னணு செயல்முறையை EPFO தொடங்கியுள்ளது.

ஒரே நேரத்தில் தங்கள் பங்கை டெபாசிட் செய்யாமல் ECR -ஐ தாக்கல் செய்ய அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை மத்திய தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் துறை நிறுவனத்தின் இயக்குநர் திரு. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இந்தத் தளர்வு நிச்சயமாக சிறு தொழில்களுக்கு உதவும். மேலும், ஊரடங்கின் போது ​​நாடு முழுவதும், EPFO, மொத்தம் 12.91 லட்சம் உரிமைகோரல்களைத் தீர்த்து வைத்துள்ளது, இதில் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 7.40 லட்சம் கொவிட்-19 உரிமை கோரல்களும் அடங்கும். அதன்படி, பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 2367.65 கோடி ரூபாய் கொவிட்-19 உரிமை கோரல்களை உள்ளடக்கிய மொத்தம் 4684.52 கோடி ருபாய் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக கொவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராட EPF திட்டத்திலிருந்து சிறப்பு விலகலை EPFO ​​அனுமதிக்கிறது. இந்த விதியின் கீழ், மூன்று மாதங்களுக்கான அடிப்படை ஊதியங்கள் மற்றும் அகவிலைப்படி அளவிற்கு அல்லது அவர்களது கணக்கின் இருப்புத் தொகையின் 75 சதவீதம் வரை, எது குறைவானதோ, அது திரும்பச் செலுத்தத் தேவையில்லாத தொகையாக வழங்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர் திரு. தியாகராஜன் கூறுகையில், மூன்று மாத ஊதியத்தை அதிகபட்சமாக 75 சதவீதம் EPF சேமிப்பை திரும்பப் பெற வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஒப்புதல், இந்த நெருக்கடி நேரத்தில் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும் அவர், ஊரடங்கின் போது தொழிலாளர்களுக்கு உதவும் இந்த முடிவை அறிவித்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிலாளர் திரு ராகவன் ஊரடங்கின் போது EPF கணக்கிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவை வரவேற்கிறார்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 65 இலட்சம் ஓய்வூதியதாரர்களைக் கொண்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு ஆறுதல் அளிக்க, ஊரடங்கு காரணமாக ஏற்படும் தாமதத்தைத் தவிர்பதற்காக EPFO வின் 135 கள அலுவலகங்கள் ஏப்ரல் 2020க்கு முன்கூட்டியே ஓய்வூதியம் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தின. ஓய்வூதியத் தொகை 764 கோடி ரூபாய் ஓய்வூதிய விநியோக வங்கிகளின் அனைத்து முக்கிய கிளைகளுக்கும் அனுப்பப்பட்டது.

அனைத்து தொழில்களும் மூடப்பட்டதால், ஊரடங்கு உண்மையில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களைப் பாதித்துள்ளது. இது நாடு முழுவதும் குறைந்த ஊதியத் தொழிலாளர்களை பாதிக்கும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க விரைவாகச் செயல்பட்டது. இப்போது சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மெதுவாக நடவடிக்கைகளைத் தொடங்குவதால், தொழிலாளர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை திரும்ப அடையலாம்.

திரு. கிருஷ்ணமூர்த்தி, தனியார் துறை நிறுவன இயக்குநர்

(Shri Krishnamurthy Director of private sector company)

 

திரு தியாகராஜன், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர்

(Shri Thyagarajan working as manager in private sector company in Trichy)

திரு ராகவன், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிலாளர்

(Shri Raghavan car accessories making company employee)

 

 



(Release ID: 1621878) Visitor Counter : 503