PIB Headquarters

டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் - பொது முடக்கச் சூழ்நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கொவிட்-19 தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் @CovidIndiaSeva சுட்டுரை கையாளுகை புகழடைந்துள்ளது

Posted On: 01 MAY 2020 8:09PM by PIB Chennai

கொவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள  தேசிய பொது முடக்கத்தின் போது, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பலன்களை இந்த நெருக்கடி நேரத்தில் பெற்றுக்கொள்ளும் விதமாக, உலகெங்கும் நடந்து வரும் அனைத்து நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களையும், செய்திகளையும் தெரிந்து கொள்ள முக்கிய ஆதாரமாக டிஜிட்டல் தளங்கள் விளங்குகின்றனவழக்கமான முறைகளுடன் சேர்த்து, குறிப்பாக டிவிட்டர் போன்ற டிஜிட்டல் தளங்களை தகவல்களை விரைவில் சென்றடைய செய்யும் வழியாக மத்திய மற்றும் மாநில அரசுகளும் கருதுகின்றன. அனைத்து மத்திய அமைச்சகங்களும் அதிகாரப்பூர்வ சுட்டுரை (Twitter) முகவரிகளை வைத்துள்ள நிலையில், தங்களது அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் முக்கிய முடிவுகள் மற்றும் இதர தகவல்களை அறிவிக்க இந்தத் தளத்தை அவை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. தவறான தகவல்களைத் தடுத்து கொவிட்-19 கட்டுப்படுத்தத் தேவையான விஷயங்களைக் குறித்துத் தெளிவுப்படுத்தும் முயற்சியாக, நிபுணர்களால் கையாளப்படும் "@CovidIndiaSeva" என்னும் சுட்டுரை சேவை தளத்தை, கொவிட்-19 தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சமீபத்தில் தொடங்கி உள்ளது. மக்களிடம் ஒரு நேரடித் தொடர்பு அலைவரிசையை ஏற்படுத்தும் விதமாக, கொவிட்-19 தொடர்பான உண்மையான பொது சுகாதாரத் தகவல்களை வேகமாக இவர்கள் பகிர்வார்கள்.

பொது மக்களின் கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை அளித்து மின்னணு ஆளுகையை நிகழ் நேரத்தில் அளிப்பது இந்த சுட்டுரை சேவை தளத்தின் நோக்கமாகும்.

கோயம்புத்தூரில் உள்ள சூலூரைச் சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ், @CovidIndiaSeva சுட்டுரை கையாளுகைக்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார். கேள்விகளுக்கு நிபுணர்கள் பதிலளிப்பதால், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இது ஒரு பயனுள்ள முயற்சி என்று கூறுகிறார்.

 

தன்னுடைய கேள்விகளுக்கு விடை கிடைத்ததால் கோயம்புத்தூரில் உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பேராசிரியர் வீராசாமி இந்த முயற்சியை பாராட்டுகிறார்.

மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் உள்கட்டமைப்பு மூலமும், அதிகமாகி வரும் இணையத் தொடர்பு மூலமும் அல்லது தொழில்நுட்பத் தளத்தில் நாட்டை டிஜிட்டலாக மேம்படுத்துவதன் மூலமும் மக்களுக்கு மின்னணு வழியாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய, இந்திய அரசால் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியால் 1 ஜூலை, 2015 அன்று இது தொடங்கப்பட்டது. பாரத்நெட் மூலம் பயனாளிகளுக்கு ஊக்கமும் அதிகாரமும் அளிக்கிறது.

அதிவேக இணைய வலைப்பின்னல்கள் மூலம் ஊரகப் பகுதிகளை இணைக்கும் முயற்சிகள் இந்தத் திட்டத்தில் அடங்கும். பாதுகாப்பான மற்றும் நிலையான உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மூலம் சேவைகள் வழங்குவது மற்றும் உலகளாவிய டிஜிட்டல் வாழ்க்கைமுறை ஆகிய மூன்று முக்கிய கூறுகளை டிஜிட்டல் இந்தியா கொண்டுள்ளது. இதன் விளைவாக, டிவிட்டர், முகநூல் போன்ற சமூக ஊடகங்களை உபயோகிப்பது மக்கள் மத்தியில் கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளதுஇந்தக் காரணங்களுக்காக, மக்களைச் சென்றடைவதற்கு அரசுகளால் இந்தத் தளங்கள் வெகுவாகப் பயன்படுத்தப்படும் வேளையில், இவற்றின் பயன்பாடு தற்போதைய கொவிட்-19 பொது முடக்க சமயத்தில் நன்றாக உணரப்படுகிறது. கொவிட் பற்றிய பொது தகவல்கள் மற்றும் செய்திகளைத் தெரிந்து கொள்ள இவற்றை ஒரு சிறந்த கருவியாக மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு ஊடாடும் தளமாக அதிகாரப்பூர்வ @CovidIndiaSeva சுட்டுரை கையாளுகை விளங்குகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் இவ்வாறாக பொதுமக்களின் வாழ்க்கையை நமது நாட்டில் மாற்றியுள்ள வேளையில், உலகத்தின் எந்தப் பகுதியுடன் ஒப்பிடும் போதும் இணைய சமூகத்துக்கு அதிகம் பேரை ஈர்க்கும் விதத்தில், தோராயமாக 10 இலட்சம் தினசரி செயல்மிகு இணையப் பயனர்களை மாதம் தோறும் இந்தியா சேர்க்கிறது.

***



(Release ID: 1620144) Visitor Counter : 173


Read this release in: English