PIB Headquarters

கொவிட்-19க்கு எதிரான போரில் இணைந்துள்ள நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள்

Posted On: 30 APR 2020 2:45PM by PIB Chennai

கொரோனா வைரஸ் மற்றும் அதன் மனிதகுலத்தை சூரையாடும் விளைவுகளைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த உலகமே போராடிக்கொண்டிருக்கும் வேளையில், கொவிட்-19 பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப மாவட்ட அதிகாரிகளுடனும், பல்வேறு துறைகளுடனும் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கி பணிபுரிய நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களை இளைஞர் விவாகரங்கள் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர், திரு. கிரெண் ரிஜ்ஜு கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான நாட்டு நலப்பணித்திட்ட மற்றும் நேரு யுவ கேந்திர சங்கத்தின் தன்னார்வலர்கள் கொவிட்- 19க்கு எதிரான போரில் தங்களது மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்தனர்கோயம்புத்தூர் கள அலுவலகத்திடம் பின்னூட்டம் வழங்கிய நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலரான சந்தோஷ், சமூக விலகல் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை  பொது மக்களிடையே ஏற்படுத்த காவல் துறையுடன் இணைவதற்கு அரசின் அழைப்பு ஒரு நல்ல வாய்ப்பு என்றார்.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர். தர்மராஜ், செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை என்பதைப் பற்றிய தெளிவான பயிற்சி, சுகாதாரத் துறையால் தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டது என்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் காவல் துறை உட்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார்.

உணவு மற்றும் இதர உதவி பொருள்களை விநியோகிப்பதில் உதவி வரும் இவர்கள், பொது மக்களை தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகின்றனர். கை கழுவும் முறைகளையும் பொது மக்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். தேவைக்கேற்ப அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் தன்னார்வலர்கள் அனுப்பப்படுகின்றனர்.

கொவிட்-19 விழிப்புணர்வு சுவரொட்டிகளை உருவாக்கிய பாரதியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலரான திருநாவுக்கரசு, அவற்றை சமூக ஊடகம் மூலம் மாணவர்களுக்கு அனுப்பினார். இந்திய நலப்பணித்திட்டத்தின் முகநூல் கணக்கிலும் இந்த சுவரொட்டிகள் பகிரப்பட்டுள்ளனஆரோக்ய சேது செயலியைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்த மற்றொரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலரான பிரீத்திகா, கொரோனா வைரஸ் தொற்றைப் பற்றி தொடக்கத்தில் சுய பரிசோதனை செய்து கொள்ள அது உதவுவதாகவும், கொவிட்-19 பரவலை சிறப்பாகத் தடுப்பதில் அது ஒவ்வொருவருக்கும் ஒரு பாதுகாவலன் போல இருப்பதால், அதன் பயன்களைப் பற்றி நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புகைப்பட விளக்கங்கள்

தன்னார்வலர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டதென நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்டாக்டர். தர்மராஜ் கூறுகிறார்.

நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் உருவாக்கிய சுவரொட்டி

பணியில் உள்ள காவல் துறையினருக்கு உதவும் நாட்டு நலப்பணித்திட்டத் தன்னார்வலர்கள்

நாட்டு நலப்பணித்திட்டத் தன்னார்வலர் பிரீத்திகா ஆரோக்ய சேது செயலியை உபயோகப்படுத்துமாறு மக்களை வலியுறுத்துகிறார்.

***
 



(Release ID: 1619958) Visitor Counter : 164