PIB Headquarters

ஆரோக்கிய செயலியை வரவேற்கும் புதுச்சேரி மாணவர்கள்

प्रविष्टि तिथि: 30 APR 2020 3:34PM by PIB Chennai

மொபைல் போனும் செயலிகளும் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்துள்ளவை.  ஆயிரக்கணக்கான செயலிகள் இன்று இலவசமாக மக்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கின்றன.  பாடம் படிக்க, புது மொழியைக் கற்றுக் கொள்ள, விளையாட, பொழுதுபோக்க என்று எல்லாவற்றுக்கும் செயலிகள் உள்ளன.  நடைப்பயிற்சியில் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்று கணக்கிட, இதயத் துடிப்பை அளவிட, தூக்கத்தை சீர்தூக்கிப் பார்க்க என்று ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு செயலிகளும் கிடைக்கின்றன.

இன்றைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் நமக்குப் பெரிதும் உதவக்கூடிய இலவச செயலி ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.  அதுதான் ஆரேராக்கிய சேது செயலி ஆகும்.  பயனாளிகள் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டு தமிழ் உட்பட 11 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.  தொற்று ஏற்படும் அபாயம் தங்களுக்கு உள்ளதா என்ற ஒருவர் தனக்குத்தானே இந்தச் செயலி மூலம் சுயமாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.  புளு டூத் மற்றும் ஜீபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தச் செயலி நோய் தொற்றுள்ளவர்கள் அருகில் இருந்தால் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை நெருங்கினால் பயனாளிக்குத் தெரிவிக்கும்.  இந்தச் செயலியில் பதியப்படும் தகவல்கள் எல்லாம் குறியீடுகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுவதால் தனிநபர் அந்தரங்கம் பாதிக்கப்படுவதில்லை.

 இந்தச் செயலியைப் பயன்படுத்துபவர் அண்மையில் யார் யாரை தொடர்பு கொண்டார் எந்தெந்த இடங்களுக்குச் சென்றார் என்பது போன்ற தகவல்களின் அடிப்படையில் நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்துக் காரணியை எடுத்துச் சொல்கிறது.  எனவேதான் தற்போது மத்திய அரசு தனது ஊழியர்கள் அனைவரையும் இந்தச் செயலியைக் கட்டாயமாகப் பதிவிறக்கம் செய்து தினசரி பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இந்த ஊரடங்கு காலத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரை சொந்த மாநிலத்துக்கு அழைத்து வரும் போது அவர்கள் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.  அப்போது அவர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை தங்களது ஃபோனில் பதிவிறக்கம் செய்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.  விரைவில் விற்பனையாக உள்ள அனைத்து மொபைல் போன்களிலும் இந்தச் செயலி ஏற்கனவே நிறுவப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுருக்கமாகச் சொல்வதானால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காலகட்டத்தில் பொதுமக்களுக்கு இந்த ஆரோக்கிய சேது செயலிதான் லைஃப்லைனாக(உயிர் காப்புப் பொருள்) இருக்கிறது.

புதுச்சேரியில் இந்தச் செயலியை மக்களிடம் பிரச்சாரம் செய்வதில் முதலமைச்சரே முன்னணியில் இருக்கிறார்முதலமைச்சர் திரு.வே. நாராயணசாமி ஏப்ரல் 19ஆம் தேதி இந்தச் செயலியை பொதுமக்கள் அனைவரும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பத்திரிகை செய்தி மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார்.  புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் பிரஷாந்த் குமார் பாண்டா மற்றும் சுகாதார இயக்குனர் டாக்டர் மோகன்குமார் இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தச் செயலியைப் பயன்படுத்துமாறு பலதரப்பு மக்களையும் கேட்டு வருகின்றனர். 

புதுச்சேரியில் இளைஞர்கள் மத்தியில் இந்தச் செயலிக்கு உள்ள வரவேற்பைத் தெரிந்து கொள்வதற்காக பிடெக் இறுதி ஆண்டு படிக்கும் சில மாணவ, மாணவிகளிடம் கேட்டோம். கேட்ட அனைவருமே இந்தச் செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நிறுவி, பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தனர்.  மாணவர் அரூப் சித்தார்த், மாணவிகள் சுருதி, தீக்‌ஷா, சுபிக்‌ஷா, மேகலா ஆகியோர் ஆரோக்கிய சேது செயலி குறித்து கூறுகின்ற கருத்துக்களைப் பார்ப்போம்.

அரூப்சித்தார்த்:

Aroop Siddharth.jpg

கோவிட்-19ஐ எதிர்கொள்ள மாணவர்களுக்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் இந்த ஆரோக்கிய சேது செயலிதான்.  கொரோனா வைரசின் பிடியில் இருந்து விடுபட எல்லோரும் இதனைப் பயன்படுத்த வேண்டும்.

 

 

 

மேகலா:

Megala.jpeg

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட இந்தச் செயலி அனைவருக்கும் உதவுகிறது.  இது அரசின் அதிகாரப்பூர்வமான செயலியாக இருப்பதால் இதனை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம் அரசுக்கு நாமும் உதவுகிறோம்.

 

 

ஸ்ருதி:

new.jpg

அரசாங்கம் பரிந்துரைத்து உள்ளதால் இதை நான் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறேன்.  கொரோனா பற்றிய தகவல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தரப்படுகின்றன. அனைவரும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

 

 

சுபிக்‌ஷா:

Subhiksha.jpeg

நம் அருகில் இருப்பவர் கொரோனா நோயாளியாகவும் இருக்கலாம்.  நாம் செல்லும் இடம் ஹாட் ஸ்பாட்டாகவும் இருக்கலாம்.  நமக்குத் தெரியாது.  ஆனால் அது குறித்து இந்தச் செயலிக்குத் தெரியும். நம்மை எச்சரிக்கை செய்யும்.  இந்தத் தொற்று காலத்தில் மிகவும் பயன் உள்ள செயலியாக இது இருக்கிறது.

 

 

 

 

 

தீக்‌ஷா:

Deeksha.jpeg

கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு இந்தச் செயலியை உருவாக்கி உள்ளது.  பெரும்பாலானவர்களிடம் ஆன்ட்ராய்ட் போன் இருக்கிறது.  ஆகவே அனைவரும் இந்தச் செயலியை பயன்படுத்த வேண்டும்.  இந்தச் செயலி நமது நோய்தொற்று நிலையை கணித்துச் சொல்கிறது.

 

 


(रिलीज़ आईडी: 1619957) आगंतुक पटल : 215