PIB Headquarters

இல்லங்களில் இருந்தபடியே அஞ்சல் சேவை பெறுவதற்கான அலைபேசி செயலி - “போஸ்ட் இன்ஃபோ”

प्रविष्टि तिथि: 28 APR 2020 6:18PM by PIB Chennai

கோவிட்-19 பொது முடக்கக் காலத்தின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே, அஞ்சல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு சேவையை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அஞ்சல் துறையின் அலைபேசி செயலி போஸ்ட் இன்ஃபோ” அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்திலுள்ள - இல்லங்களில் இருந்தபடியே அஞ்சல் சேவை பெறுவதற்கான அவசரத் தேவை - இணைப்பு மூலம்,ந்தச் சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். நேரடியாக இந்த இணைப்பின் URL மூலமாகவும் இந்த சேவையை பெறலாம் http://ccc.cept.gov.in/covid/request.aspx

அஞ்சல், அஞ்சல் வங்கி, சேமிப்பு வங்கி, காப்பீடு, நிதிச்சேவைகள், உட்பட அனைத்து அஞ்சல் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். ஒரு சேவை, தேவை என்ற கோரிக்கை, வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்ட பிறகு, தனிப்பட்ட குறிப்பு எண் கொடுக்கப்படும். வாடிக்கையாளர்கள், அவர்களது கோரிக்கை பற்றிய நிலைமையைத் தெரிந்து கொள்ள இந்த எண் உதவும்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து போஸ்ட் இன்ஃபோ என்ற இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, பயன் பெறுமாறு தமிழ்நாடு வட்ட, சென்னை, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

***


(रिलीज़ आईडी: 1619047) आगंतुक पटल : 316
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English