PIB Headquarters

பிரதமர் ஜன் தன் யோஜனா: இடர் காலத்தில் கிடைத்த சலுகை

Posted On: 25 APR 2020 4:45PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் ஜன் தன் திட்டத்தில் உள்ள பெண்கள் தங்கள் கணக்குகளில் ரூ.500 வரவு வைத்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஏப்ரல் முதல் மூன்று மாதங்களுக்கு, பிரதமர் ஜன் தன் திட்டத்தில் வங்கிக் கணக்கு உள்ள பெண்களின் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 வரவு வைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ், 20.39 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் இந்த உதவியை வரவேற்ற பெண்கள், ஊரடங்கின் போது அதிக பண உதவி கோரினர். பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2014 ஆம் ஆண்டில் பிரதமர் ஜன் தன் திட்டம் நிதி சேர்க்கைக்கான தேசிய பணியாகத் தொடங்கப்பட்டது.

ஊரடங்கின் போது வேலைக்கு செல்ல முடியாததால், தொகையை அதிகரிக்குமாறு கரூர் தண்ணீர்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரி அரசாங்கத்தை வலியுறுத்தினார். டால்மியாபுரத்தை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் வணிக அதிகாரி அலெக்சாண்டர், திருச்சி களவிளம்பர அலுவலரிடம் பேசும்போது, ​​இப்பகுதியில் உள்ள 700ன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளதாகவும், ஊரடங்கின் போது அளிக்கப்பட்ட இந்த உதவி மிகவும் மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார். லால்குடியைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், ஊரடங்கால் மக்கள் வங்கிகளுக்கு வரமுடியாத நிலையில், அவரே நேரடியாக மக்கள் வீடுகளுக்கு சென்று ஜன் தன் பணத்தை விநியோகிக்கிறார். வீடு தேடி வரும் வங்கியின் சேவையை மக்கள் பெரிதும் பாராட்டினர் என்று அவர் கூறினார்.

ஊரடங்கின் போது, ன் தன் திட்டத்தின் மூலம் ரூ.500 வழங்கும் மத்திய அரசுக்கு கரூர் திம்மச்சிபுரத்தைச் சேர்ந்த லட்சுமி நன்றி தெரிவித்தார். இதேபோல், ரூரின் கருகளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி, பெரியபாளையம் குளித்தலையைச் சேர்ந்த மணிமேகலை மற்றும் ராதா ஆகிய அனைவருமே இத்தகைய நெருக்கடி காலத்தில் மத்திய அரசின் உதவியைப் பாராட்டினர்.

கொவிட்-19 -னால் ஏற்பட்ட ஊரடங்கின் போது, ​​அன்றாட வருவாயை நம்பியுள்ள ஏழை தொழிலாளர்கள் மோசமாக பாதிக்கப்படுவதுடன், அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றனர். மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசின் திட்டமான ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நேரடி பணபரிமாற்றம் மூலம் (DBT) பணமாக வங்கியில் செலுத்தபடுவதால், இடைத்தரகர்கள் யாருமின்றி அரசாங்கத்தின் பண உதவியை வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் முழுமையாகப் பெற முடியும். கூடுதலாக, மக்களின் துயரங்களைக் குறைக்க அரசு இலவச அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய், இலவச எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றையும் வழங்கி வருகிறது.

அலெக்ஸாண்டர், திருச்சி, டால்மியாபுரம், பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்

சாந்தி, கரூர் – ஜன் தன் கணக்கின் பயனாளர்

 லட்சுமி, கரூர் – ஜன் தன் கணக்கின் பயனாளர்

லால்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர், செந்தில்குமார்  


(Release ID: 1618214) Visitor Counter : 267


Read this release in: English