PIB Headquarters

கொரானா வைரஸ் காரணமான பொது முடக்க காலத்தில் அரசு இணைய கல்வி தளங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது

Posted On: 24 APR 2020 5:13PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று காரணமான பொது முடக்கக் காலத்தில் அனைத்து துறைகளும் பாதிப்பிற்குள்ளாகவில்லை, அதில் ஒன்று அரசாங்கத்தின் இணைய கல்வி தளம் ஆகும். இந்த பொது முடக்கம் காரணமாக பெரும்பாலான தேர்வுகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதிலும், பல்வேறு இணைய கல்வி தளங்கள் மூலம் மாணவர்கள் இணைய வகுப்புகள் வாயிலாக கற்றல் தொடர்வதை மத்திய அரசு உறுதி செய்திருந்தது. டிஜிட்டல் கல்வி தளங்களை முழுமையாக பயன்படுத்துமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். திறந்த வெளி கல்வி வளங்களின் தேசிய களஞ்சியம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த முயற்சியாகும். அதில் அனைவரும் இணைய-நூலகங்கள், இணைய-பாடநெறிகளின் பயன்பாட்டை பெறுவதுட்டுமல்லாமல் பல்வேறு தலைப்புகள் அடிப்படையிலான இணைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். மேலும் ஆசிரியர்களும் இதில் சேர முடியும் என்பதுடன், வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

மேல்நிலை பள்ளி மாணவர் அருணோதயன், திறந்த வெளி கல்வி வளங்களின் தேசிய களஞ்சியம் வழங்கும் மின்-நூலகம் மூலம் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் இந்த ஊரடங்கு காலத்தை மிகவும் பயனுள்ள வகையில் செலவிடுவதாக கூறுகிறார்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைவர் திரு. சுஜித், இந்த ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட்ட பயனுள்ள முயற்சிகளுக்கு பிரதமருக்கும், மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், அவர் கற்றல் அனுபவத்தை இணையம் வாயிலாக பல்வகைப்படுத்தி மாணவர்களுக்கு வழங்க கல்வி நிறுவனங்கள் வெவ்வேறு தீர்வுகளுடன் முன்வருமாறு அரசு அழைப்பு விடுத்ததை பாராட்டினார். ஊரடங்கு காலத்திலும் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே கற்பதை பெற்றோர்களும் ஊக்குவிக்கிறார்கள்.

ஸ்வயம் எனப்படும் இணையம் வழி கற்கும் இளம் ஆர்வமுள்ளவர்களுக்கான செயல்பாடு, இந்திய அரசால் தொடங்கப்பட்ட மற்றொரு திட்டமாகும், இது உலகளாவிய கல்வியின் மூன்று முக்கிய கொள்கைகளான பயன்பாடு, விகிதாச்சாரம், தரம் ஆகியவற்றை அடைவதை நோக்கமாகக் கொண்டது. பெங்களூரின் இந்திய அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து ஏழு இந்திய தொழில்நுட்ப கழகங்களான பம்பாய், டெல்லி, கான்பூர், கரக்பூர், மெட்ராஸ், குவவாஹத்தி மற்றும் ரூர்க்கி ஆகியவற்றால் தொடங்கப்பட்ட மனிதவள துறை அமைச்சகத்தின் மற்றொரு முக்கிய திட்டமான தொழில்நுட்ப மேம்பட்ட கற்றல் குறித்த தேசிய திட்டம் ஐ.ஐ.டி.களிடமிருந்து கற்க ஆர்வமுள்ள எவருக்கும் தரமான கல்வியை வழங்க 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

தனியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான டாக்டர் எம். பழனிசாமி கோவிட்-19 காலகட்டத்தில் ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசின் முன்முயற்சிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, நாட்டில் உயர் கல்வி ஒவ்வொரு வீட்டு வாசலையும் அடைவதை உறுதி செய்வதில் இது போன்ற இணையதளங்கள் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என தெரிவித்தார்.

முதுகலை பட்டப்படிப்பு  முதலாம் ஆண்டு மாணவரான ஆனந்து ஜிகி, கோயம்புத்தூரின் கள மக்கள் தொடர்பு அலுவலத்தினரிடம் பேசும் போது, நெருக்கடி நிலைமையின் போது கல்வி போன்ற அத்தியாவசியத் துறையில் டிஜிட்டல் கல்வி தளங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதில் அரசாங்கம் மற்றவர்களுக்கு வழிக்காட்டியாக திகழ்கிறது என்றார்.

பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தினசரி வழக்கமான ஆன்லைன் வகுப்புகளைக் கொண்டிருக்கும் போதிலும், இது போன்ற நடவடிக்கைகள் அரசாங்கக் கொள்கைகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், சிறந்த தகவலறிந்த குடிமக்களை உருவாக்குவதில் நீண்ட கால பலனளிக்கும்.

திரு ஆனந்து ஜிகி, ஆன்லைன் வகுப்புகளை பயன்படுத்தும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்.



(Release ID: 1617922) Visitor Counter : 536


Read this release in: English