PIB Headquarters
மூத்த குடிமகளின் மனித நேயம்
प्रविष्टि तिथि:
22 APR 2020 6:36PM by PIB Chennai

மதுரை ரிசர்வ் லைன் அஞ்சலகத்திற்கு இன்று வந்த, 65 வயதான திருமிகு. கார்த்திகா பாலநாயகம் அம்மாள், ரூ.100/- வீதம், 32 மணியார்டர்களை அனுப்பினார். பிரதமருக்கும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் கொரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் நிவாரண நிதிக்காக இந்தத் தொகையை அனுப்புவதாக அவர் தெரிவித்தார். மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் அவர், தனது உணவுக்காக வைத்திருந்த பணத்தை அனுப்புவதாகவும், யாரிடமும் இந்தத் தொகையை வசூலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நாடுகளுக்கும், இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக, வங்கி மூலம் பணம் அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அவரின் ஈ-மணியார்டரை மதுரை ரிசர்வ் லைன் அஞ்சலகத்தில் பணியாற்றும் திருமதி தேவி புக் செய்தார். படிவங்களை அங்குள்ள அனைத்து தபால்காரர்களும் நிரப்பிக் கொடுத்தனர்.
****
(रिलीज़ आईडी: 1617221)
आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English