நிதி அமைச்சகம்

தங்க சேமிப்புப் பத்திரத் திட்டம் 2020-21

Posted On: 13 APR 2020 9:22PM by PIB Chennai

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் தங்க சேமிப்புப் பத்திரங்கள் வெளியிட இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரையில் பின்வரும் அட்டவணையின்படி ஆறு தொகுப்புகளாக தங்க சேமிப்புப் பத்திரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

 

வ. எண்

தொகுப்பு வரிசை

பணம் செலுத்துவதற்கான தேதி

வெளியீட்டு தேதி

1.

2020 - 21 வரிசை I

ஏப்ரல் 20 - 24, 2020

ஏப்ரல் 28, 2020

2.

2020 - 21 வரிசை II

மே 11 - 15, 2020

மே 19, 2020

3.

2020 - 21 வரிசை III

ஜூன் 08 - 12, 2020

ஜூன் 16, 2020

4.

2020 - 21 வரிசை IV

ஜூலை 06 - 10, 2020

ஜூலை 14, 2020

5.

2020 - 21 வரிசை V

ஆகஸ்ட் 03 - 07, 2020

ஆகஸ்ட் 11, 2020

6.

2020 - 21 வரிசை s VI

ஆகஸ்ட்  31- செப். 04, 2020

செப்டம்பர் 08, 2020

 

இந்தப் பத்திரங்கள் வணிக வங்கிகள்,  (சிறுநிதி வங்கிகள் மற்றும் பட்டுவாடா வங்கிகள் தவிர), ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (எஸ்.எச்.சி.ஐ.எல்.), குறிப்பிட்ட தபால் நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குப் பரிவர்த்தனை மையங்கள், அதாவது தேசிய பங்குப் பரிவர்த்தனை மையம், மும்பை பங்குப் பரிவர்த்தனை மையம் ஆகியவற்றின் மூலமாக விற்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1614135



(Release ID: 1614228) Visitor Counter : 114


Read this release in: English , Hindi