PIB Headquarters

சென்னை விமான நிலையத்தில் நிவாரண/ வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பயணிகள் விமானங்களுக்கு தாமதமின்றி சுமுகமான சுங்க அனுமதி

Posted On: 10 APR 2020 7:18PM by PIB Chennai

10.4.2020 வெள்ளிக்கிழமைன்று சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நிவாரண/ வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதற்கான இரண்டு விமானங்களுக்கு சுங்கத்துறை தாமதமின்றி, சுமுகமான அனுமதிளித்தது.

 

அதிகாலை 1.20 மணிக்கு 248 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஸ்கூட் டைகர் ஏர்லைன்ஸ் TR-0579 விமானம், சென்னை விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது.

 

மதியம் 1.10 மணிக்கு எண்பது பயணிகளுடன், ட்ரூக் ஏர் ராயல் பூடான் ஏர்லைன்ஸ் விமானம் KB603, ஏர் இந்தியாவால் இயக்கப்பட்டு, சென்னையிலிருந்து பாரோ (பூடான்) வுக்குப் புறப்பட்டுச் சென்றது.

 

முன்னதாக கோவிட் 19 ஊரடங்கு காலத்தின்போது 1304 வெளிநாட்டுப் பயணிகள் கொண்ட, சிறப்பு நிவாரண/ வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விமானங்கள், கோலாலம்பூர், பாரீஸ், பிராங்க்பர்ட், மஸ்கட் ஆகிய இடங்களுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, சுங்கத்துறை, தேவையான அனுமதியை அளித்திருந்தது என்று சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையர், திரு.ராஜன் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 

*****



(Release ID: 1613070) Visitor Counter : 113


Read this release in: English