ஆயுஷ்
தேசிய ஆயுஷ் மிஷன் திட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஆயுஷ் சுகாதாரம் & நல மையங்களை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
21 MAR 2020 4:16PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய ஆயுஷ் மிஷன் திட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல மையங்களை (AYUSH HWC) சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு ரூ.3399.35 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20 முதல் 2023-24 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் நல மையங்களை செயல்படுத்த இதில் மத்திய நிதியாக ரூ.2209.58 கோடியும், மாநிலங்களின் பங்களிப்பாக ரூ.1189.77 கோடியும் செலவிடப்படும்.
தேசிய ஆயுஷ் மிஷன் திட்டத்தின் கீழ் நல மையங்களை செயல்படுத்துவதால் பின்வரும் நோக்கங்கள் நிறைவேறும் என vஎதிர்பார்க்கப் பட்டுள்ளது:
- ஆயுஷ் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளின்படி முழுமையான உடல் நல முன்மாதிரி திட்டம் உருவாக்கப்படும். இதில் நோய்த் தடுப்பு, சிகிச்சை பெற ஊக்குவித்தல், குணமாக்குதல், மறுவாழ்வு உதவிகள் செய்தல் மற்றும் சிகிச்சை காலத்துக்குப் பிந்தைய சேவைகள் ஆகியவற்றை இப்போதுள்ள பொது சுகாதார வசதிகள் மூலமாக அளிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
- தேவையான மக்களுக்கு தகவல்களை தெரிவித்து ஆயுஷ் சேவைகள் இருப்பதை விளக்கி, அவர்களின் விருப்பத்தின்படி தேர்வு செய்ய வகை செய்தல்.
- வாழ்க்கை முறை, மரணம், யோகா, மருத்துவ மூலிகைகள் மற்றும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் நடைமுறைகளின் உடல் பலத்திற்கு ஏற்ப மருந்துகள் அளித்தல் ஆகிய சமுதாய விழிப்புணர்வு சேவைகளும் இதில் அடங்கும்.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தொடர்புடைய இதர அமைச்சகங்களுடன் கலந்தாலோசனை செய்து, நாடு முழுக்க 12,500 நல மையங்களை செயல்படுத்த பின்வரும் இரண்டு மாதிரிகளை ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் ஆயுஷ் மருந்தகங்களை (சுமார் 10,000) தரம் உயர்த்துதல்.
தற்போது செயல்பட்டு வரும் துணை சுகாதார மையங்களை (சுமார் 2,500) தரம் உயர்த்துதல்.
****
(Release ID: 1607875)