மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி உட்பட புகழ் பெற்ற 10 பெண்மணிகளின் பெயர்களில் பல்கலைக்கழக இருக்கைகள் அமைப்பு

Posted On: 16 MAR 2020 4:26PM by PIB Chennai

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி புகழ்பெற்ற 10 பெண்மணிகளின் பெயர்களில் பல்கலைக்கழக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவியுடன் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பெண்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த இருக்கைகளை அமைத்துள்ளது. இந்த முன்முயற்சி “சிறந்த பெண் நிர்வாகிகள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், சமூக சேவகர்கள் பெயர்களில் பல்கலைகழகங்களில் இருக்கைகளை அமைத்தல்” என்றழைக்கப்படும். 

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களைப் போற்றும் வகையில் அமைக்கப்படும் இந்த இருக்கைகள், இளம் பெண்கள் தங்களது உயர்கல்வியைத் தொடர ஊக்குவிப்பாக அமையும்.  இந்த இருக்கைகளை அமைப்பதற்கு ஆண்டுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.50 லட்சம் செலவாகும்.

மக்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்க் இத்தகவலை எழுத்து மூலமான பதிலில் தெரிவித்தார்.

 

----

 

 

 

 



(Release ID: 1606628) Visitor Counter : 89


Read this release in: English