குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாமல்லபுரம் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கய்ய நாயுடு ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்

Posted On: 28 FEB 2020 2:45PM by PIB Chennai

சகோதர சகோதரிகளே,

இன்று மாமல்லபுரத்தில் உங்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாமல்லபுரம் என்ற பெயரே நம் மனங்களில் மரியாதை மற்றும் பயபக்தியை உண்டாக்குகிறது. இந்த நகரின் வளமையான கலாச்சார பாரம்பர்யம், பிரமாண்டமான இந்துக் கோவில்கள், குகைகள் மற்றும் சிற்பங்கள் நாடு முழுவதிலும் மட்டுமின்றி உலகெங்கும் இருந்து வரும் மக்களின் மனதை மயக்கும் அம்சங்களாக உள்ளன.

நான்கு வகையான கோவில் நினைவுச் சின்னங்கள் ஒரே இடத்தில் இருக்கும் அபூர்வமான யுனெஸ்கோ உலக பாரம்பர்ய இடமாக இது உள்ளது. இங்கு -

கடற்கரைக் கோவில் - மிகவும் பழமையான கற்கோவில்களின் கட்டமைப்பைக் கொண்டது.

ரதக் கோவில்கள் - இந்தியாவில் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கட்டடக் கலைக்கு பொருத்தமான உதாரணமாக உள்ளன

குகைக் கோவில்கள் மற்றும் அர்ஜுனன் தவம் அல்லது கங்கையின் தோற்றம் - உலகில் மிகப் பெரிய திறந்தவெளி கற்சிற்பங்களில் ஒன்றாக உள்ளது

இந்த நினைவுச் சின்னங்களில் கலையம்சத்தின் பன்முகத் தன்மையை மட்டுமின்றி, பரிணாம மாற்றத்தையும் இங்கு காண முடியும்.

கட்டடக்கலையின் அற்புதங்களை மட்டுமின்றி, மாமல்லபுரத்தின் பல்லவர் காலச் சிற்பங்கள், அபூர்வமான மற்றும் சம அளவிலான  உணர்வுகளை ஏற்படுத்தும்.

கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைப்பதற்கு இதைவிடச் சிறந்த வேறு இடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

பல்லவர் சாம்ராஜ்யத்தில் முக்கிய கடல் துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்த நகரம், இயற்கை அழகின் அம்சங்கள் கொண்டதாகவும் உள்ளது.

இயற்கையும் கலாச்சாரமும் ஒன்றாக சங்கமித்துள்ள இடமாக மாமல்லபுரம் உள்ளது. இரண்டையும் மதித்து, பாதுகாப்பதன் மூலம், அதன் வளமைக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

 எனதருமை இளம் நண்பர்களே,

கலையும் கலாச்சாரமும் மனிதகுலத்தின் மனம் மற்றும் உணர்வின் மேம்பாட்டின் செழிப்பைக் காட்டுபவையாக உள்ளன.

மகத்தான கலாச்சாரத்தின் வழிவந்தவர்களாக இருப்பதில் நாம் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம்.

உலகில் உயிர்ப்புடன் உள்ள நாகரிகங்களில் மிகவும் பழமையானவற்றில் ஒன்றாக நமது நாகரிகம் உள்ளது.

உலகின் ``விஸ்வகுருவாக'' இந்தியா கருதப்பட்டது, கடந்து போன நமது பொற்காலமாக உள்ளது.

பரதநாட்டியத்தின் பிறப்பிடமாகவும், சாஸ்திரிய சங்கீத பாரம்பர்யம் மிகுந்த இடமாகவும், இந்தியாவின் பல வகையான கலாச்சாரங்களின் வளமைகளைக் கொண்டதாகவும் தமிழகம் உள்ளது.

இன்றைக்கு தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம் போன்ற கலைகளின் திறமை வெளிப்பாடுகளைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பழமையான கலை வடிவங்களுடன், நாட்டுப்புறக் கலை வடிவங்களும் இங்கு வளமையாக உள்ளன.

இந்து சமூகத்தில் அனைத்து தரப்பினரையும், நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ளவர்களும்  தழுவியுள்ள பக்தி இயக்கம் இந்தியாவின் இந்தப் பகுதியில் இருந்து உருவாகியுள்ளது.

இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட முதலாவது மொழியாக தமிழ் உள்ளது. அதன் வளமையான இலக்கியங்கள் உத்வேகம் தருபவையாக உள்ளன. அதன் கவிதைகளுக்கு உலக அளவில் ஈர்ப்பு உள்ளது.

காலங்களைக் கடந்த ஞானமாக உள்ள திருக்குறள் இப்போதும் நமக்கு வழிகாட்டியாக உள்ளது.

``வாழ்க்கை என்பது உடலுடன் தொடர்பு கொண்டதாக உள்ள போது, அன்பு என்பது வாழ்வுடன் ஒருங்கிணைந்ததாக உள்ளது''

என்று கூறும்போது, பகிர்தல் மற்றும் அக்கறை காட்டுதலையும், வசுதெய்வ குடும்பகம் என்பதையும் திருக்குறள் நமக்கு கற்பிக்கிறது.

தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் போன்ற பெரிய கோவில்கள், நம்முடைய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின்  மேன்மையான திறமைகளைப் பறைசாற்றும் சாட்சிகளாக உள்ளன.

எனதருமை இளம் மாணவர்களே,

இந்த நினைவுச் சிற்பங்கள் உங்கள் கற்பனையைத் தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும்.

இந்த மகத்தான கோவில்களைச் சிந்தனையில் உருவாக்கி, கட்டமைப்பு செய்த - தலைமை கட்டடக்கலை குரு - `ஸ்தபதி'யின்  எண்ணங்கள் எவ்வளவு ஆழமாக இருந்திருக்கும் என்று சிந்தியுங்கள்.

இந்த நினைவுச் சின்னங்கள் கலை வடிவங்களாக மட்டுமின்றி, பொறியியல் துறையின் அற்புதங்களாகவும் உள்ளன.

இந்த `ஸ்தபதிகளிடம்' இருந்து நமது பொறியியல் மாணவர்கள் உத்வேகம் பெற வேண்டும். இதுபோன்ற நினைவுச் சின்னங்களை எப்படி உருவாக்கியிருப்பார்கள், என்ன மாதிரியான உத்திகளைப் பயன்படுத்தியிருப்பார்கள், எப்படி வரைபடங்கள் தயாரித்திருப்பார்கள், இவ்வளவு அதிக உயரத்தில் சிற்பங்களைச் செதுக்க எந்த அளவுக்கு தளங்கள் அமைத்திருப்பார்கள் என்பது பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும்.

இந்தக் கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக, ஆற்றல் மிக்கவர்களாக, உறுதியான சிந்தனை கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும்?

மாமல்லபுரத்தில் உள்ள இந்தக் கல்லூரியின் மாணவர்களாக இருப்பது உங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். உங்கள் கல்வி நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட பகுதியாக இந்த நகரின் முழுப் பகுதிகளும் அமைந்துள்ளன. ஒவ்வொரு சிற்பத்திலும், ஒவ்வொரு கட்டடத்திலும் மதிப்பிட முடியாத அளவுக்கு பாடங்கள் புதைந்து கிடக்கின்றன; நீங்கள் அவற்றைக் கவனித்து, பயிற்சி எடுத்து. சேகரித்து ஒன்று சேர்க்க வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் கட்டடக் கலையும், திட்டமிடலும் மிகுந்த மதிப்பு மற்றும் முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன.

21-ஆம் நூற்றாண்டில் கட்டடக் கலை நிபுணர்கள் மற்றும் திட்டமிடல் நிபுணர்களின் பங்களிப்பு வெறுமனே வடிவமைப்பு செய்வது, மக்கள் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களுக்கு வடிவம் கொடுப்பதாக மட்டும் இல்லை.

இன்றைய உலகில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றி வருவதால், வேகமாக மாறி வரும் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு கட்டடக் கலை நிபுணர்கள் புதுமை சிந்தனையாளர்களாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மை என்ற இரட்டைக் கோட்பாடுகள் உங்களுடைய அனைத்து திட்டங்களிலும் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும்.

குறைவான தண்ணீரைப் பயன்படுத்தும், மின்சாரத்தைக் குறைவாக பயன்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை கட்டடங்களுக்கான திட்டங்களை ஊக்குவிப்பது தான் இப்போதைய தேவையாக உள்ளது. தானாக நடக்கும் செயல்பாடுகள் மூலம் `ஸ்மார்ட் கட்டடங்களை' கட்டுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சாதகமான விஷயங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் எரிசக்தி சிக்கன அமைப்பு, பசுமை கட்டடங்களுக்கான எரிசக்தி சேமிப்பு கட்டட நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இந்த நெறிமுறைகளை ஒவ்வொருவரும் உங்களுக்கான நெறிமுறைகளாக ஏற்றுக் கொண்டு, எரிசக்தியை சிறப்பாக பயன்படுத்தக் கூடிய கட்டடங்களை உருவாக்க மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

வேகமாக நிகழ்ந்து வரும் நகரமயமாக்கலின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நகர்ப்புறங்களில் குடியேற்றங்கள் அதிகரிப்பதன் விளைவுகளை குறைக்கவும், ஊரகப் பகுதிகளிலும், நகரங்களின் அருகில் உள்ள பகுதிகளிலும் கட்டமைப்புகள் மற்றும் இதர வசதிகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அவ்வாறு செய்யும்போது, பாரம்பர்யம் மற்றும் தொழில்நுட்பத்தை ஒன்று சேர்த்து,சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், நீடித்த பயன் தரக் கூடிய வகையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகர்ப்புற மையங்களில் உள்ளதைப் போன்ற வசதிகளை கிராமப் பகுதிகளிலும் உருவாக்க வேண்டியது முக்கியம்.

அதே சமயத்தில், கிராமப் பகுதிகள் கட்டடங்களைக் கொண்ட வனங்களாக மாறிவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் உருவாக்கும் சூழ்நிலைகள், நவீனத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் சரியான கலவையாக இருக்க வேண்டும்.

நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், நல்ல எதிர்காலத்துக்காக இயற்கையைப் பாதுகாக்கும் வகையிலும் கட்டடக் கலை நிபுணர்களும், நகரங்களுக்கு திட்டமிடும் நிபுணர்களும் செயல்பட வேண்டியது முக்கியம்.

துடிப்புமிக்க மற்றும் பொறுப்புமிக்கவர்களாக செயல்படக் கூடிய பொருத்தமான தன்மைகளை நீங்கள் கற்ற இந்தக் கல்வி நிலையம் உங்களுக்குக் கற்பித்திருக்கும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

 

அன்பான மாணவர்களே,

உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. உலகில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

உங்கள் கனவுகளை நனவாக்கி, இலக்குகளை எட்டுவதற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் ஏராளமான அற்புதமான வாய்ப்புகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

போதும் என்ற மனநிலை எப்போதும் வந்துவிடாமல், தனிச்சிறப்பு நிலையை எட்டுவதை இலக்காக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய துறையில் முன்மாதிரிகளை உருவாக்குபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் நீங்கள் ஆக்கபூர்வ பங்காளர்களாக இருக்க வேண்டும்.திருவள்ளுவரின் காலங்களைக் கடந்த வார்த்தைகளை இங்கு நினைவுகூர வேண்டும்.

``சாத்தியமற்றது என்று கருதப்படும் விஷயத்தை செய்து முடிக்கும் திறன் தான், சாதாரணமானவர்களில் இருந்து மகத்தானவர்களைப் பிரித்துக் காட்டுகிறது'' என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

நீங்கள் அனைவரும் அறிந்துள்ளபடி, கட்டடங்களுக்கு வடிவமைப்பு மற்றும் நகரங்களுக்கான திட்டமிடல்களை உருவாக்கும் உத்திகள் பல ஆண்டு காலமாக மேம்பட்டு வந்திருக்கின்றன. ஆரோக்கியமான, வளமான சமூகங்களை உருவாக்குவதில் அவை முக்கியப் பங்கு வகித்துள்ளன.

உலகின் முன்னணி அறிவியல் பல்கலைக்கழகங்கள் கற்பித்தலில் மட்டுமின்றி, பெரும்பகுதி மக்களை சென்றடையக் கூடிய அளவிற்கு பொருத்தமான தொழில்நுட்பங்களை உருவாக்கும் இடங்களாகவும் நவீனத்துவத்தின் மையமாகவும் உருவாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றன.

நமது நகரங்கள் மகிழ்ச்சியானவையாகவும், பாதுகாப்பானவையாகவும் இருக்கும் வகையிலும், பசுமைக் கட்டடங்களைக் கொண்டதாகவும், அதிக சிக்கனமானவையாகவும் கட்டுபடியாகும் செலவிலும் உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்தக் கல்வி நிலையத்தை கேட்டுக்கொள்கிறேன்.

சிற்பிகளுக்குப் பயிற்சிகள் கொடுத்து, திறன்களை வளர்ப்பதன் மூலம் பழங்கால கலாச்சார பாரம்பர்யத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலில் இந்தக் கல்லூரி முக்கிய பங்காற்றுகிறது என்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

சுதை, கல், உலோகம் மற்றும் மரச் சிற்பங்கள் உருவாக்கும் இடங்களையும், கட்டடக் கலை பணியிடத்தையும், பாரம்பர்யமான ஓவிய கலைக்கூடத்தையும், கடவுள் வெங்கடேஸ்வரரின் சிலையையும் உங்கள் வளாகத்தில் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாமல்லபுரத்து சிற்பிகள் இன்னும் உளி, சுத்தியல் ஆகியவற்றையே பயன்படுத்துகிறார்கள் என்பதையும், பல்வேறு சிற்ப சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நடைமுறைகளையே பின்பற்றுகிறார்கள் என்பதையும் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய காலச் சிற்பிகள் தனிச்சிறப்பான திறமைகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பல்லவர் காலத்தைச் சேர்ந்த நுணுக்கமான,  கலைநயமிக்க காட்சிகளை அப்படியே உருவாக்கும் திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

இந்த தனித்துவமான அம்சங்கள் காரணமாக, மாமல்லபுரத்தில் கைகளால் உருவாக்கப்படும் கல் சிற்பங்களுக்கு 2017ல் புவிசார் குறியீடு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இந்தப் பழங்காலக் கலையை ஊக்குவித்து, கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகள் தங்கள் தொழில் நலன்களைப் பாதுகாக்க அவர்களுக்கு உதவி செய்வதாக இந்த அங்கீகாரம் இருக்கும்.

இந்த தேசத்தின் மதிப்புமிக்க கலாச்சாரம் மற்றும் பாரம்பர்யத்தைப் பாதுகாத்து, மேம்படுத்துவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் கடுமையாகப் பாடுபடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். பாரம்பர்யமான ஞானத்தை, நவீன அறிவியலுடன் சரியாக சேர்த்து, உங்களுடைய துறைகளில் மேன்மை நிலையை எட்டுவீர்கள் என்றும் நம்புகிறேன்.

உங்களுடைய எதிர்கால முயற்சிகளில் சிறந்த வெற்றிகள் கிடைக்க நான் வாழ்த்துகிறேன்.

நன்றி

ஜெய் ஹிந்த்

**********



(Release ID: 1604640) Visitor Counter : 532


Read this release in: English