PIB Backgrounder

இந்திரதனுஷ் தீவிர தடுப்பூசி இயக்கம் 2.0 : மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் பயிலரங்கு

प्रविष्टि तिथि: 10 FEB 2020 3:00PM by PIB Chennai

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறைக்கு உட்பட்ட மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் (இசை மற்றும் நாடகப்பிரிவு), மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மற்றும் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறையுடன் இணைந்து, சென்னையில் இன்று (10.02.2020) இசை மற்றும் நாடகப் பிரிவினருக்கு, “இந்திர தனுஷ் தீவிர தடுப்பூசி இயக்கம் 2.0” குறித்த புத்தாக்கப் பயிற்சி மற்றும் பயிலரங்கு ஒன்றை நடத்தியது. 

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்கக சுகாதார அதிகாரி டாக்டர் சதீஷ், சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு இயக்குநர் திரு வி பழனிச்சாமி,  தூர்தர்ஷனின் பொதிகை தொலைக்காட்சி செய்திப்பிரிவு இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, யுனிசெப் அமைப்பின் தகவல் தொடர்பு நிபுணர் திரு.சுகாதா ராய் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர். இவர்கள் தீவிர தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து உரையாற்றினர். 

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தொண்டை அழற்சி, இருமல், இழுப்புவாதம், இளம்பிள்ளை வாதம், காசநோய், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் அழற்சி (பி-வகை) ஆகிய எட்டு நோய்களைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்குடனும், மத்திய அரசின் சுகாதாரத்துறை இந்திர தனுஷ் தீவிர தடுப்பூசி இயக்கம் 2.0-வை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் 27 மாநிலங்களில் உள்ள 272 மாவட்டங்களிலும், இந்தத் தடுப்பூசி இயக்கம்  செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் தடுக்கக் கூடிய உயிரிழப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக தடுப்போம் என்கிற நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடையும் நோக்கிலும் இந்த தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படுகின்றன.

*****


(रिलीज़ आईडी: 1602616) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English