PIB Headquarters
இந்திய கடலோர காவல்படையின் 43-ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டம்
Posted On:
02 FEB 2020 7:39PM by PIB Chennai
இந்திய கடலோர காவல்படை தனது 43-ஆவது ஆண்டு விழாவை 01, பிப்ரவரி 2020 அன்று கொண்டாடியது. சென்னையில் உள்ள கடலோர காவல்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில், கடலோர காவல்படை தனது உதய தினத்தை கொண்டாடியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்திய கடலோர காவல்படை, நாட்டிற்காக கடந்த 43 ஆண்டுகளாக ஆற்றிய அரிய சேவைகளை நினைவுகூறும் விதமாக, இப்படையின் கிழக்குப் பிராந்திய பிரிவு சார்பில் 08.12.2019 முதல் 30.01.2020 வரை பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவந்தன. பெண்களுக்கு அதிகாரமளித்து, பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் விதமாக இந்திய கடலோர காவல்படையில் பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டு, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உலகின் 4-வது பெரிய கடலோர காவல்படையான இந்திய கடலோர காவல்படை தனது அயராத பணி காரணமாக நம்பிக்கைக்குரிய படையாக உருவெடுத்திருப்பதுடன், கடலோர பாதுகாப்பையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
இந்திய கடலோர காவல்படை தற்போது 62 விமானங்கள், 18 ஹோவர்கிராப்டுகள் உட்பட 144 ரோந்துப்படகுகள் போன்றவற்றைக் கொண்ட வலுவானப் படையாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
***** 
(Release ID: 1601665)
Visitor Counter : 107