பிரதமர் அலுவலகம்

107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர், பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைக்கிறார்

Posted On: 02 JAN 2020 5:28PM by PIB Chennai

107-வது இந்திய அறிவியல் மாநாட்டை, பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஜிகேவிகே வளாகத்தில், 3 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றும் பிரதமர் மோடி, ஐ-ஸ்டெம் இணையதளத்தையும் தொடங்கி வைக்கிறார். கர்நாடக முதலமைச்சர் திரு.பி.எஸ்.எடியூரப்பா மற்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

 

“அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: ஊரக வளர்ச்சி” என்பதே, இந்த ஆண்டு இந்திய அறிவியல் மாநாட்டின் மையக் கருத்தாக இருக்கும். நோபல் பரிசு பெற்றவர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், கல்வியாளர்கள், காவல் துறை சார்ந்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்ளக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்களையும் ISC 2020 UASB” என்ற செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த செயலியின் சேவையை கூகுல் பிளே ஸ்டோரிலும் பெறலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.indiansciencecongress&hl=en_IN.

***



(Release ID: 1598359) Visitor Counter : 172