PIB Headquarters

அஞ்சல் துறையின் காந்தக்கோடு கொண்ட அனைத்து ஏடிஎம் அட்டைகளும் 31.01.2020 முதல் முடக்கப்படும்

Posted On: 30 DEC 2019 6:32PM by PIB Chennai

அஞ்சல் துறையின் காந்தக்கோடு கொண்ட அனைத்து ஏடிஎம் அட்டைகளும் 31.01.2020 முதல் முடக்கப்படும். எனவே, அஞ்சலக சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள், தாங்கள் பயன்படுத்தும் காந்தக்கோடு கொண்ட ஏடிஎம் அட்டைகளுக்குப் பதிலாக, புதிய EMV சிப் அடிப்படையிலான ஏடிஎம் அட்டைகளை அவர்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

2017-முதல் அஞ்சல்துறை, காந்தக்கோடு கொண்ட ஏடிஎம் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.  அவை செயல்படும் வகையில், சென்னை நகர மண்டலத்தில் ஏடிஎம்கள் நிறுவப்பட்டன.  இந்த காந்தக்கோடு கொண்ட, 607245 என்ற இலக்கங்களுடன் தொடங்கும் அட்டைகள் அங்கீகாரமற்ற வகையில் பயன்படுத்தப்படவும், ஏமாற்றும் வகையில் பணம் பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலை நீக்குவதற்காக புதிய EMV சிப் அடிப்படையிலான ஏடிஎம் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

பழைய காந்தக்கோடு கொண்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, 31.01.2020-க்குப் பிறகு எந்தப் பரிவர்த்தனையையும் வாடிக்கையாளர்கள் செய்ய இயலாது. எனவே, அஞ்சலக சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள், இந்தப் பழைய காந்தக்கோடு ஏடிஎம் அட்டையை கொடுத்துவிட்டு, புதிய EMV சிப் அடிப்படையிலான ஏடிஎம் அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு சென்னை நகர மண்டலத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜென்ரல் வெளியிட்ட செய்திக்குறிப்பு  கேட்டுக் கொள்கிறது.

*******


(Release ID: 1598012) Visitor Counter : 117
Read this release in: English