PIB Headquarters

ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2019

Posted On: 04 DEC 2019 6:55PM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் இளநிலை எழுத்தர் (எல்டிசி) / இளநிலை செயலக உதவியாளர் (ஜேஎஸ்ஏ),  அஞ்சல் உதவியாளர் (பிஏ) / அஞ்சல் பிரிப்பு உதவியாளர் (எஸ்ஏ), தரவு உள்ளிடும் பணியாளர் (டிஇஓ), பதவிகள் நியமனத்திற்கான ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2019-க்கான அறிவிக்கையைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 10.01.2020 கடைசி நாளாகும்.

01.01.2020-ன்படி தேவைப்படும் அத்தியாவசிய கல்வித் தகுதிகள் கீழ்வருமாறு:-

(i) எல்டிசி)/ ஜேஎஸ்ஏ,  பிஏ / எஸ்ஏ, டிஇஓ (சி & ஏஜி-ன் டிஇஓ-க்கள் தவிர)- பதவிகளுக்கான விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(ii) இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலக (சி & ஏஜி) டிஇஓ பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது அதற்கு இணையான கல்வி நிறுவனத்திலிருந்து கணிதத்துடன் அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தென்மண்டலத்தில் அடுக்கு(Tier)-1 தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூரிலும், புதுச்சேரியிலும், ஆந்திராவில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, கர்நூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகியவற்றிலும், தெலங்கானாவில் ஐதராபாத், கரீம்நகர், வாரங்கல் ஆகியவற்றிலும் என மொத்தம் 21 மையங்களில் தேர்வு நடைபெறும்.

 

பணியாளர் தேர்வாணையத்தின் இணைச் செயலர் மற்றும் தென்மண்டல இயக்குநர் திரு. கே. நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

***************



(Release ID: 1595003) Visitor Counter : 117


Read this release in: English