PIB Backgrounder

ரூ.35.17 கோடிக்கு போலி ரசீதுகள் மூலம் ரூ.6.34 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு, வர்த்தகர் ஒருவர் கைது

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2019 4:43PM by PIB Chennai

சுமார் ரூ.35.17 கோடிக்கு போலி ரசீதுகள் மூலம் ரூ.6.34 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக அஸ்கர் என்டர்பிரைசஸ் மற்றும் 8 இதர நிறுவனங்களின் உரிமையாளரான திரு.கே.இம்ரான்கான் கைது செய்யப்பட்டார்.

     ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி சென்னை தெற்கு ஆணையர் திரு.கே.எம்.ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் திரு.ராம் குமார் கோபால், கண்காணிப்பாளர்கள் திரு.கே.ரங்கராஜ், திரு.டி.செந்தில்குமார் திரு.எல்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர்கள் திரு.சுரேஷ்குமார் பிஜார்னியா மற்றும் திரு. எஸ். ஞானி ஆகியோர் அடங்கிய குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட இம்ரான்கானை கைது செய்து சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல்-II, நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவர் வரும் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக ஜிஎஸ்டி மற்றும் கலால்வரி துறை சென்னை தெற்கு உதவி ஆணையர் திரு.ராம் குமார் கோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

                                           ******


(வெளியீட்டு அடையாள எண்: 1594512) வருகையாளர் எண்ணிக்கை : 148
இந்த வெளியீட்டை படிக்க: English