நிதி அமைச்சகம்
தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டன
प्रविष्टि तिथि:
28 NOV 2019 5:10PM by PIB Chennai
தமிழ்நாட்டில் மின்சார இணைப்புகளை வலுப்படுத்துவதற்கான 451 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டன. சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் மின்சார இணைப்பை இது வலுப்படுத்தும். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம், ஈசிஈசி-யின் ஒரு பகுதியாக சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈசிஈசி-ஐ மேம்படுத்துவதில் மத்திய அரசுக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி முன்னணி கூட்டாளியாகும்.
இந்த கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு.சமீர் குமார் கரே, ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியா அலுவலகத்தில் இயக்குனராக உள்ள திரு.கெனிச்சி யோகோயாமா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் பேசிய திரு.கரே, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ள கூடுதல் மின்சாரத் தேவையை சமாளிக்க இந்தத் திட்டம் உதவும் என்றும், சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்தில் உள்ள புதுப்பிக்கக் கூடிய மின்சாரம் உள்ளிட்ட புதிய மின் உற்பத்தி அமைப்புகளிடமிருந்து மின்சாரத்தை மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிலியல் மையங்களுக்கு கொண்டு செல்ல திட்டம் உதவும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு.யோகோயாமா, சென்னை-கன்னியாகுமரி தொழிலியல் இணைப்புத் திட்டத்திற்கு சிறப்புத் திட்டமிடல், அடிப்படைக் கட்டுமானத்திற்கான முதலீடு ஆகியவற்றின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி உதவி வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டின் விரைவாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் தொழிலியல் போட்டியிடும் தன்மையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.
*********
(रिलीज़ आईडी: 1594160)
आगंतुक पटल : 233